Skip to main content

Posts

ஏன் என்மேல் அளவில்லா அன்பை அருவி போல் அனைத்து நேரமும் கொட்டுகிறாய்..? பதில் என்னவென்று தெளிவாகச் சொல்ல தெரியவில்லை ஒருவேளை நீ கவிதை எழுதுவதனால் கூட இருக்கலாம்..! ச...
பேனாவில் காதலை நிரப்பித் தந்து கவிதை எழுது என்கிறாள்...! எதற்காக என்றால் எனக்காக என்றாள்...! எழுதத் தான் போகிறேன்...! கவிதையில் காதலை...! காதலென்னும் கவியை..! ஆனால் எழுதுபவன...
குழந்தைகள் தொடர்வண்டியில் பாட்டியுடன் அமர்ந்திருக்க வண்டி நகரத் தொடங்கியதும் சிரிப்பு ஒருகண்ணில் ஈற்றீல் ஈரம் மறுகண்ணிலென வேகமெடுக்கும் வரை டாட்டா காட்டிக...
முதல் விருப்பம் முதல் காதல் முதல் கைக்கோர்ப்பு முதல் கவிதை முதல் முத்தம் முதல் உறவு முதல் அணைப்பு முதல் பிரிவு முதல் கண்ணீர் முதல் நீ முதல் நான் முதல் நாம்...!!! கார்த...
இடைவேளையில் வாசலில் வந்து திண்பண்டங்களை விற்கும் அந்த வயதான பாட்டியை இப்பொழுது எந்தப் பள்ளியின் வாசல்களிலும் காண முடிவதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
பிணப் பூக்கள் நான் ஒரு மலராகப் பிறந்தேன் ஏதோ ஒரு மங்கையின் கூந்தலில் மணம் பரப்ப வேண்டும் அது அவள் மனம் வரை பரவ வேண்டும் ஏதோ ஒரு காதலன் என்னைப் பரிமாறி தன் மனம் பறி...
சாலையில் நின்று பெண்ணொருத்தி அழுதுக் கொண்டிருந்தாள் கண்ணீரைத் துடைக்க அவளது கைகள் ஏனோ முன்வரவில்லை அவளைச் சுற்றியிருந்த காற்று ஈரமாகியிருந்தது பெரும்புயலில் சிதைந்த காட்டைப் போல கூந்தல் கலைந்திருந்தது அடைமழையிலும் அழியாத வாசலில் வரைந்த கோலத்தைப் போல நெற்றியில் குங்குமம் நிறைந்திருந்தது நானும் காற்றும் அழுகையை நிறுத்த அவளுக்கு ஆறுதல் அனுப்பினோம் காரிகை மொத்த கண்ணீரையும் இன்றே அழுதுத் தீர்த்துவிட வேண்டுமென்று முடிவுச் செய்துவிட்டாள் போல நானும் காற்றும் தோற்றுக் கொண்டே இருந்தோம் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து நான் கிளம்பிவிட்டேன் ஆனால் தோற்று தோற்று மடியில் சாய்த்து சாய்த்து அவளைத் தொடர்ந்து ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தது அந்தப் பேரமைதியான காற்று...!!! கார்த்திக் பிரகாசம்...