ஏன்
என்மேல்
அளவில்லா
அன்பை
அருவி போல்
அனைத்து நேரமும்
கொட்டுகிறாய்..?
பதில்
என்னவென்று
தெளிவாகச் சொல்ல
தெரியவில்லை
ஒருவேளை
நீ
கவிதை எழுதுவதனால் கூட
இருக்கலாம்..!
சரி..!
நான் கவிதை எழுதுவதை
நிறுத்திவிட்டால்..?
நிறுத்திவிட்டால்
என்ன..?
இதுவரையில்
நீ
எழுதியுள்ள
கவிதைகள் போதாதா..!
காலம் முழுதும்
உன்மேல் அன்பைக்
கொட்டித் தீர்க்க..!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment