Skip to main content

குழந்தைகள்
தொடர்வண்டியில்
பாட்டியுடன் அமர்ந்திருக்க
வண்டி நகரத் தொடங்கியதும்
சிரிப்பு ஒருகண்ணில்
ஈற்றீல் ஈரம் மறுகண்ணிலென
வேகமெடுக்கும் வரை
டாட்டா காட்டிக் கொண்டு
பின்னாலயே ஓடிவந்த
அந்த
இளம் பெற்றோரின்
வழியனுப்பதலோடு
இன்றைக்கான பயணம்
தொடங்கியது
இந்த நாளுக்கும்
எனக்கும்...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments