“வனஜம்” என்ற சிறுகதையில்…
இப்பொழுது எத்தனையோ வருஷங்கள் கடந்துவிட்டன.
இன்றும் செண்பகவல்லியம்மன் கோவிலுக்குப் போனால் எனக்கு அந்தப் பழைய வனஜமும், வனஜத்தின் பழைய காதலனாகிய என் பைத்தியக்கார உருவமும் நினைவுக்கு வருகிறது. என் பழைய உருவத்தைப் பார்த்து வெட்கம் தாங்காமல், “நல்ல பயலடா நீ! ஒரு சிறுமிக்கு முன்பாக பெரிய மனுஷ வேஷம் போட்டுக்கொண்டு அசட்டுத்தனமாக என்னென்னவோ பிதற்றிக்கொண்டு கூத்தாடிய நீயுமாச்சு, உன் காதலுமாச்சு... போ, போ” என்று என் ஞாபகத்தையே விரட்டித் துரத்துகிறேன். இரவு வீட்டுக்கு வந்து குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் வனஜத்தைப் பார்த்தால் சங்கோஜமாகவே இருக்கிறது.
Comments
Post a Comment