எழுதியவர்: சித்ரன்
வகைமை: சிறுகதைகள்
வெளியீடு: யாவரும் பதிப்பகம்
மிகை யதார்த்த வெளியைப் பரந்த மொழி வளத்துடன் அணுகியிருக்கும் சிறுகதைகள். தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளில், காமம் ஓர் அச்சுறுத்தும் கொடிய மிருகமாகப் பின்தொடர்வதை வாசிப்பினூடே நடுக்கத்துடன் உணர முடிகிறது.
கனாத்திறமுரைத்த காதைகள்” என்ற தலைப்பு கதையிலிருந்து,
“உன் மனம் எளிதில் உள்நுழைய முடியா ஒரு கவசமிட்டுள்ளது. என்னால் உன்னை ஊடுருவ முடியவில்லை என்பதைச் சற்று ஆற்றாமையுடனே ஒப்புக் கொள்கிறேன். ஆனால், உன் வாதைகளை நீ கடந்தாக வேண்டுமென்றால், என்னை உனக்குள் அனுமதித்துத்தான் ஆக வேண்டும். எதற்காக உன் மனதை ஒரு பெரும்பாறையாய் வடிவமைத்திருக்கிறாய்? உன் சுயநினைவு ரகசியங்களின் பொதி மூட்டையைச் சுமந்து அலுப்புறவில்லையா? அதன் முடிச்சை நான் அவிழ்க்குந் தோறும் நீ ஏன் வேறொரு சிடுக்கை உருவாக்குகிறாய். உன் வலியைப் போக்கத்தான் முயல்கிறேன். இது இருவரின் பரஸ்பர நம்பிக்கையின் பிறகே விளையும் கூட்டுச் செயல்பாடு”
Comments
Post a Comment