கூண்டு போல அறை
சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!!
நினைத்த நேரத்தில் தூங்கி
நினைக்காத நேரத்தில் எழுவதை
விட என்ன பெரிய சுதந்திரம்...!!!
வாழ்க்கையிடம் நானோ
என்னிடம் வாழ்க்கையோ
வம்போ வாய்த் தகராறோ
ஏற்படுத்திக் கொள்ள
ஒருபோதும் நேரம்
இருந்ததில்லை...!!!
கையில் காசு இல்லை
ஆதலால் கடனும் இல்லை...!!!
கவலைகள் என்று ஏதுமில்லை
களவுப் போக ஒன்றுமில்லை...!!!
பீஸ் கட்டும் அப்பாவின்
பீலிங்சை பகிர கூடவே
இருந்த தோழி...!!!
அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும்
மீறிப் போகும் போது அடிப்பதற்கும்
தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!!
கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம்
இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!!
விடுதியில் இருந்தேன்
பறவையாய்த் திரிந்தேன்...!!!
மீண்டும் ஒருமுறை
வேண்டும் அந்த
விடுதி வாழ்க்கை...!!!
கார்த்திக் பிரகாசம்...
சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!!
நினைத்த நேரத்தில் தூங்கி
நினைக்காத நேரத்தில் எழுவதை
விட என்ன பெரிய சுதந்திரம்...!!!
வாழ்க்கையிடம் நானோ
என்னிடம் வாழ்க்கையோ
வம்போ வாய்த் தகராறோ
ஏற்படுத்திக் கொள்ள
ஒருபோதும் நேரம்
இருந்ததில்லை...!!!
கையில் காசு இல்லை
ஆதலால் கடனும் இல்லை...!!!
கவலைகள் என்று ஏதுமில்லை
களவுப் போக ஒன்றுமில்லை...!!!
பீஸ் கட்டும் அப்பாவின்
பீலிங்சை பகிர கூடவே
இருந்த தோழி...!!!
அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும்
மீறிப் போகும் போது அடிப்பதற்கும்
தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!!
கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம்
இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!!
விடுதியில் இருந்தேன்
பறவையாய்த் திரிந்தேன்...!!!
மீண்டும் ஒருமுறை
வேண்டும் அந்த
விடுதி வாழ்க்கை...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment