அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,
முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...
நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும் நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும் பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...
நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...
என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...
நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள் வந்து மீண்டும் ஒரு முறை பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் தேர்வு எழுத மனதை ஆசைக் கொள்ள தூண்டி விடுகின்றன..
நீங்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைகாகவாவது கண்டிப்பாக சென்டம் எடுக்க வேண்டும் என்று என்னால் முடிந்த வரை முயிற்சித்தேன் ஆனால் முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் அந்த மனக் குறை எப்பொழுதும் என் மனதில் வற்றாத நதியாய் ஓடிக் கொண்டே இருக்கின்றது...
அடுத்த ஜென்மத்திலாவது உங்கள் மாணவனாக வேதியியலில் சென்டம் எடுக்க வேண்டும்.. எனக்காக அல்ல. உங்களுக்காக...
கடைசியாக, நீங்கள் முதன்முறை வகுப்பில் சொன்ன
"Chemistry is a Mystery" என்ற வாக்கியம் என்றும் மனதில் இருந்து மங்காது...
வாழ்க்கையில் "அனுபவம்" தான் மிகச்சிறந்த ஆசிரியர் என்பார்கள்.. ஆனால் என்னை பொறுத்தவரையில் உங்களை போன்ற ஆசிரியருடன் நான் பயணித்த நாட்கள் தான் எனக்கு "சாலச் சிறந்த அனுபவம்"...
நீங்கள் பார்த்த ஆயிரக்கணக்கான மாணவர்களில் நான் ஒருவன் ஆனால் நான் பார்த்த வெகுசில ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...
நம் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களின் ஒருமித்த குரலாக நன்றி நிறைந்த வாழ்த்துக்களுடன்
கார்த்திக் பிரகாசம்...

ஆருமை
ReplyDelete
ReplyDeleteஅருமை