Skip to main content

Posts

Showing posts from December, 2014

மறந்தேன்...!!!

பசிக்கு நீரைக் குடித்து வளர்ந்ததால் ருசியை மறந்தேன்..! அன்றாடங்காட்சி ஆதலால் அறுசுவை உணவுகளை மறந்தேன்..! ஆசைகளை இழந்து பழகியதால் பணத்தை மறந்தேன்..! தாழ்ந்துப்படுக்...
நொடிகளெல்லாம் நெடிகளாக ஆவியாகிக் கொண்டிருக்கின்றன அவளது நெருக்கத்தில்...!!! நிமிடங்களெல்லாம் நிஜத்தை மறந்து மீனை விட வேகமாக நீந்திக் கொண்டிருக்கின்றன அவளது நினைவில்...!!! நாட்களெல்லாம் நீ இல்லை நான் இல்லை என்று அலறியடித்து ஓடிக் கொண்டிருக்கின்றன அவளது உரையாடலில்...!!! வருடங்களெல்லாம் பாகுத்தன்மையற்ற நீரைப் போல வழிந்தோடிக் கொண்டிருக்கின்றன அவளது காதலில்...!!! கார்த்திக் பிரகாசம்... 
நடிகன் நாட்டை ஆளத் துடிக்கிறான்... நாட்டை ஆள்பவன் சிறந்த நடிகனாக திகழ்கிறான்.. கார்த்திக் பிரகாசம்...
மூக்குத்தியில் மொத்த அழகையும் முத்தமிழையும் ஒருசேர முடிந்து வைத்திருக்கிறாள்... அன்பாக அணைத்துப் பேசும் போது இயல் தமிழையும் கால் கொலுசு சிணுங்குவதைப் போல கொஞ்சிப் பேசும் போது இசைத் தமிழையும் பொய்யாக சண்டையிடுவதைப் போல நடிக்கும் போது நாடகத் தமிழையும் கற்பிக்கிறாள்... அந்த மூக்குத்தி அழகில் காதலில் மூழ்கிவிட்டேன் அவளின் மீதும் தமிழின் மீதும்... கார்த்திக் பிரகாசம்...
தன் பிறந்த மகளுக்காக குடியைக் கைவிடுவதாக மனைவிக்கு சத்தியம் செய்துவிட்டு தன் செல்ல மகளுக்கு 'மது'மி'தா' என்று பெயரிடுகிறார் அந்த பாசக்கார தந்தை..   கார்த்திக் பிரகாசம்..
தூக்கத்தைக் கெடுப்பதும் பின்பு துக்கத்தைக் கொடுப்பதும் காதலின் வழக்கம்.. கார்த்திக் பிரகாசம்..
வேலைக் கிடைக்காதவனெல்லாம் வேலைக்கு ஆகாதவன் என்று அர்த்தம் இல்லை... கார்த்திக் பிரகாசம்...

இசைக் காதலன்...

செவிகளிடம் சிநேகம் கொள்ள வந்த காற்று தன்னுள் ஒளித்து வைத்திருந்த இசையால் செவிகளை செழுமையாக்கி தன்னுடன் கட்டி அணைத்துக் கொண்டுவிட்டது... கட்டி அணைத்ததில் கட்டுப்பாட்டை இழந்த செவிகள் இசையோடு காதல் கொண்டுவிட்டன... கார்த்திக் பிரகாசம்...
கற்பனை உலகத்திலும் கனவுதான் கண்டுக்கொண்டிருக்கிறேன் அவளும் என்னைக் காதலிக்கிறாள் என்று.. கார்த்திக் பிரகாசம்....
சில்லறையில் சிக்கிக் கொண்டிருக்கிறது நம் மனிதநேயம்.. கார்த்திக் பிரகாசம். .
கற்பனை உலகத்திலும் கனவுதான் கண்டுக்கொண்டிருக்கிறேன் அவளும் என்னைக் காதலிக்கிறாள் என்று.. கார்த்திக் பிரகாசம்....

இசைக் காதலன்..

செவிகளிடம் சிநேகம் கொள்ள வந்த காற்று தன்னுள் ஒளித்து வைத்திருந்த இசையால் செவிகளை செழுமையாக்கி தன்னுடன் கட்டி அணைத்துக் கொண்டுவிட்டது... கட்டி அணைத்ததில் கட்டுப்பாட்டை இழந்த செவிகள் இசையோடு காதல் கொண்டுவிட்டன... கார்த்திக் பிரகாசம்...
புரியும் போது காதல் விளங்க முடியா கவிதை.. பிரியும் போது காதல் விடைத் தெரியா  விடுகதை.. கார்த்திக் பிரகாசம்...
ஒவ்வொரு உயிரும் தண்ணீர்க் குடம் உடைத்து உலகுக்கு வருவதால் தான் என்னவோ அதே உயிர் பிரியும் போதும் தண்ணீர் நிரம்பிய பானையை உடைத்து வழியனுப்புகின்றனர் போலிருக்கிறது.. கார்த்திக் பிரகாசம்..
தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் சாதிக்க முடியாத இலட்சியத்தை பணத்தாலும் பதவியாலும் எளிதில் சாதித்து விட முடிகிறது... கார்த்திக் பிரகாசம்..