மூக்குத்தியில் மொத்த அழகையும்
முத்தமிழையும் ஒருசேர
முடிந்து வைத்திருக்கிறாள்...
அன்பாக அணைத்துப் பேசும் போது
இயல் தமிழையும்
கால் கொலுசு சிணுங்குவதைப் போல
கொஞ்சிப் பேசும் போது
இசைத் தமிழையும்
பொய்யாக சண்டையிடுவதைப் போல
நடிக்கும் போது
நாடகத் தமிழையும் கற்பிக்கிறாள்...
அந்த மூக்குத்தி அழகில் காதலில்
மூழ்கிவிட்டேன் அவளின் மீதும்
தமிழின் மீதும்...
கார்த்திக் பிரகாசம்...
முத்தமிழையும் ஒருசேர
முடிந்து வைத்திருக்கிறாள்...
அன்பாக அணைத்துப் பேசும் போது
இயல் தமிழையும்
கால் கொலுசு சிணுங்குவதைப் போல
கொஞ்சிப் பேசும் போது
இசைத் தமிழையும்
பொய்யாக சண்டையிடுவதைப் போல
நடிக்கும் போது
நாடகத் தமிழையும் கற்பிக்கிறாள்...
அந்த மூக்குத்தி அழகில் காதலில்
மூழ்கிவிட்டேன் அவளின் மீதும்
தமிழின் மீதும்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment