பசிக்கு நீரைக் குடித்து வளர்ந்ததால்
ருசியை மறந்தேன்..!
அன்றாடங்காட்சி ஆதலால் அறுசுவை
உணவுகளை மறந்தேன்..!
ஆசைகளை இழந்து பழகியதால்
பணத்தை மறந்தேன்..!
தாழ்ந்துப்படுக்க தாய்மடி இருந்ததால்
காதலை மறந்தேன்..!
நாடிப்போக நட்பு இருந்ததால்
உறவுகளை மறந்தேன்..!
எதற்கும் ராசி இல்லாதவன் என்றதனால்
கிரகங்களை மறந்தேன்..!
போராடித்தான் வெற்றி கிடைக்கும் என்பதனால்
தோல்விகளை மறந்தேன்..!
நிரந்தரம் இல்லை என்பதனால்
புகழை மறந்தேன்..!
நம்பி புரோஜனம் இல்லை என்பதனால்
கடவுளை மறந்தேன்..!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment