தூய அழகு பற்றிப்
பேசிக் கொண்டிருந்தாள்
தூய அழகு என்று ஏதேனும் உள்ளதா?
அழகானது தூய்மையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே
என்றேன்
அன்பானது தூய அழகுதானே
என்றாள்
தூய அன்பல்ல
அன்பில் தூய்மையே பேரழகு என்றேன்
இறுக்கி அணைத்துக் கொண்டாள்
நிலவின் ரகசிய சிரிப்பொலி
கேட்டதன்று
Comments
Post a Comment