அப்பாவை போலவே இருக்கும்
அவருக்கு நரம்பியல்
கோளாறு
கவலைப்படாதீர்கள்
சிகரெட்டை நிறுத்தினால் காப்பாற்றிவிடலாம்
நம்பிக்கையோடு இருங்கள்
கடவுள் இருக்கிறான் என்கிறார் மருத்துவர்
மருத்துவருக்கேயுரிய
பொய்யான சக்கை சிரிப்பைச்
சிந்தியபடி
அப்பா சிகரெட் பிடித்ததில்லை
நல்வினையாக
அவருக்குக் கடவுள் நம்பிக்கையும்
இல்லை
Comments
Post a Comment