பட்டாம்பூச்சியைப் போல்
படபடத்து திரிந்த
மழலை
அழுவதை பார்த்துவிட்டது
எத்தனையோ முறை அழுதிருக்கிறேன்
கனமான கண்ணீர்த்துளிகளை
இதுவரைக்கும்
யாருக்கும் காட்டியதில்லை
தனிமையில்
ஓ’வென கதறியழுவதை காட்டிலும்
நெடுந்தூரம் பயணித்து
பெருங்கூட்டத்திற்குள் தொலைந்து
மனதை அவிழ்த்தெறிந்து
மௌனமாய் அழுதிடுவேன்
மழலையின்
பிஞ்சு விரல்களில் பதிந்து
றெக்கை முளைத்த
ஓர் கண்ணீர்த் துளி
தூக்கிப் பறந்தது
தூரத் தேசத்தின் காட்டில் மழையானேன்
Comments
Post a Comment