எழுதியவர்: அழகிய பெரியவன்
வகைமை: நாவல்
வெளியீடு: நீலம் பதிப்பகம்
கேள்வி கேட்டால் அதிகார அமைப்பிற்கு அறவே பிடிப்பதில்லை. அதிலும் நிரந்த வருமானமும், நிலையான வாழ்வாதாரமுமின்றி அன்றாடத்தின் பொழுது நிச்சயமற்ற பொருளாதார சூழல் ஈனும் குண்டூசி அளவிலான கரிசனத்தினால் இன்னும் உயிரோடு உலவிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட பாமரன் கேட்டால்?
அவ்வாறு கேள்வி கேட்கப்படுவதை, தம் அடிப்படை கட்டமைவின் விறைப்புத் தன்மைக்கு நேர்ந்த கடும் அவமானமாகக் கருதுகின்றது அதிகார அமைப்பு.
மேலும் குறிப்பிட்ட ஒரு அமைப்பின் கிளை அதிகாரம் கேள்விக்குள்ளாகும் போது, நியாய தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு ஒரே மரத்தின் பல கிளைகளாய் விற்றிருக்கும் இதர அதிகாரங்களும் ஒன்றிணைந்து அதிகாரத்தின் குரலாய் கூட்டுச் சேர்ந்து "உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?" என்ற ஒருவிதமான அருவருப்புத் தன்மையோடு சாமானியனின் கழுத்தை நெரிக்கின்றன. இதன் மறைமுக தொனி, “நீயெல்லாம் எங்கள கேள்வி கேக்குற அளவுக்கு தெகிரியம் வந்துடுச்சா” என்பதே. பொது சமுகத்தில் அதிகாரத்திற்கென்று கட்டமைக்கப்பட்டிருக்கும் பவிசு விளைவிக்கும் எரிச்சலே, நீ எப்படி என்னைப் பார்த்து கேள்வி கேட்கலாம். என் பதவியின் மதிப்பு தெரியுமா? அதன் அதிகாரம் தெரியுமா? என கேக்குற என்று திருப்பி சாமானியனிடம் பதிலுக்கும் எழுப்பப்படும் இளக்கார கேள்விகள்.
சாமானியனுக்கு எந்நாளும் இந்த மாதிரி தைரியம் வந்துவிடக் கூடாது என்பதே எல்லாவிதமான அதிகாரத்திற்கும் முழுமூச்சான குறிக்கோள். இது பல இடங்களில் நேரடியாகவும், நாள்பட்ட நம்பகத் தன்மையை வளர்த்து நேரம் பார்த்து வஞ்சிப்பது என மறைமுகமாகவும், சமூகத்தின் பல அடுக்குகளில் அரங்கேறுகிறது
குரல்வளை நசுக்கப்படும் சாமானிய சமூகத்தின் கரத்தில் இருக்கும் சக்திவாய்ந்த ஒரே ஆயுதம் சட்டம். ஜனநாயகத்தின் மீது பற்று கொண்ட அவர்களின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment