வகைமை: சிறுகதைகள் எழுதியவர்: கவிதைக்காரன் இளங்கோ வெளியீடு: யாவரும் பதிப்பகம் ஏதேனும் இலக்கிய நிகழ்வில் கவிதைக்காரன் இளங்கோ உரையாற்றுகிறார் என்று தெரிந்தால், மறுயோசனையே இன்றி அந்நிகழ்வுக்குச் செல்ல முடிவு செய்து விடுவேன். கவிதை, நாவல், சிறுகதைகள் குறித்த அறிமுக மற்றும் விமர்சன நிகழ்வுகளின் போதான அவரது உரைகளில், அதன் மையவோட்டத்தின் ஒரு சிக்கலான சாராம்சத்தை தனித்தனி கூறுகளாகப் பிரித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வானது, வாசிப்பிலும், இலக்கியத்தை அணுகும் முறைமையில் என்னளவில் பல புதிய திறப்புகளை உண்டாக்கியிருக்கின்றன. அவரது அறிமுக உரையைக் கேட்டுவிட்டு வாங்கிய புத்தகங்களும் உண்டு. உதாரணத்திற்குச் சுஜாதா செல்வராஜின் "கடலைக் களவாடுபவள்" கவிதைத் தொகுப்பு, 'ஏக்நாத்'தின் "சாத்தா" நாவல் [ சட்டென நினைவில் தோன்றியவை]. பெரும்பாலான உரைகளில் ஒருவித PSYCOLOGICAL TOUCH இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒருவேளை "உளவியல்" படித்திருக்கிறாரோ எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். அவரிடம் நேரடியாகக் கேட்கச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. ஆனால் "பனிக்குல்லா" சிறுகதைத் தொகுப்பை வாசி...