Skip to main content

தழல்

வகைமை: நாவல்
எழுதியவர்: கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: யாவரும் பதிப்பகம்

கிருஷ்ணமூர்த்தியின் "புனைசுருட்டு" என்று சிறுகதையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். "பிருஹன்னளை, அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்" , "பாகன்" என மூன்று நாவல்களும், "சாத்தானின் சதைத் துணுக்கு" , "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி இருக்கின்றன. இவருடைய நான்காவது நாவல் "தழல்".

"பலவீனமானவர்களால் என்றும் மன்னிக்கவே இயலாது. மன்னிப்பது என்பது பலமுள்ளவர்களுக்கான நற்குணம்" என்ற காந்தியின் கூற்றோடு துவங்குகிறது நாவல்.

செய்யாத குற்றத்திற்காக ஊரார் முன்பு பெற்ற அப்பாவே தன்னை திருடன் எனப் பழி சுமத்தி அடித்துத் தண்டிக்கும் இரக்கமற்ற செயலால் மனம் உடைந்து போகிறான் சிறுவன். இத்தனைக்கும் யார் திருடன் (!) எனத் தெரிந்திருந்தும் [அவருக்கு மட்டுமே], ஒரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் கடக்கும் பொறுப்பற்ற அப்பாவைக் கடுமையாக வெறுக்கத் துவங்குகிறான். தினமும் இரவில், சிறுவயதில் திருடன் என்ற பட்டத்தோடு தலைகுனிந்து நின்ற அவமானம் வெவ்வேறு விதமாகக் கனவுகளில் வாட்டுகிறது. அதனைக் கடக்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே தவிக்கிறான். அவர் மன்னிப்பு கேட்பதற்காகக் காத்திருக்கிறான். அப்பாவிற்கும், மகனுக்கும் பேச்சுவார்த்தை அற்றுப் போகிறது. தன் மீது சுமத்தப்பட்ட பழியின் சாயல் தினந்தோறும் பின்தொடருகிறது. அதனாலேயே அன்றாட வாழ்வில் கடும் ஒழுக்கத்தையும், கூடுதல் நேர்மையையும் கடைப்பிடிக்க எல்லா சந்தர்ப்பங்களிலும் முயல்கிறான்

காலப் போக்கில் மனைவி, குழந்தை ஆன பிறகு , "நீ அவரை மன்னித்துவிடு" என அப்பாவும், மனைவியும் வற்புறுத்துகிறார்கள். அவனிடம் மன்னிக்கும் மனோபலம் கைகூட மறுக்கிறது. ஒருகட்டத்தில் அப்பாவின் மரணப்படுக்கையில் அவர்கூடவே இருந்து கவனித்துக் கொள்கிறான். கடைசி மூச்சுக்குள், "நீ திருடவில்லை. நீ குற்றவாளி இல்லை. என்னை மன்னித்துவிடு" என்று உண்மையைச் சொல்லிவிடுவார் என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் தோன்றக் காத்திருக்கிறான். ஆனால் அவர் இறக்கிறார். தனக்கு மட்டும் தெரிந்த உண்மையை தன்னோடு புதைத்துக் கொண்டு உயிரை விட்ட அப்பாவின் மேல் இன்னும் ஆத்திரம் கூடுகிறது

கடைசிவரை அப்பாவும் மன்னிப்பு கேட்கவில்லை. இவனாலும் தானாக மன்னிக்க முடியவில்லை. வாழ்நாள் முழுக்க இந்த சுழலுக்குள்ளேயே கிடந்து தன்னை இழக்கிறான்.மன்னிப்பு என்ற விடுதலையைக் கண்டு உணராமலேயே மாய்ந்துவிடும் வாழ்க்கையை கண்முன் பிரதிபலிக்கிறது நாவல். சமீபத்தில் வாசித்ததாலோ என்னவோ இமையத்தின் "ஆறுமுகம்" நாவலின் மைய கதாபாத்திரமான ஆறுமுகத்தின் நினைவுகள், இந்நாவலில் மையமான "மார்ட்டின்" வாசிக்கும் போது தோன்றியது. ஒரு விதத்தில் ஆறுமுகமும், மார்ட்டின் என இருவரின் வாழ்வும் "மன்னிப்பு" என்னும் ஒற்றை புள்ளியில் முடிச்சிட்டிருப்பதாகக் கருதுகிறேன்.

ஒரு சில இடங்களில் எழுத்துப் பிழைகளும், வாக்கியங்களில் ஒருமை/பன்மை பொருத்தமற்றும் அமைந்திருக்கின்றன. அடுத்த பதிப்பில் இவற்றைக் 
களைந்தால் நன்று.

நாவல் பயணிக்கும் களமான செவ்வாய் பேட்டை, நெத்திமேடு, குகை, பிரபாத், பில்லுக்கடை, அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி, அடிவாரம், எருமாபாளையம், ஜங்ஷன் என்பது நான் பிறந்து வளர்ந்த "சேலம்" என்பதாலும், மேலும் எழுத்தாளரின் சக ஊர்க்காரன் என்ற வகையிலும் கூடுதல் மகிழ்ச்சி..

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...