எழுதியவர்: எலீ வீசல்
மொழிபெயர்ப்பு: ரவி.தி.இளங்கோவன்
வகைமை: சுயசரிதை
வெளியீடு: எதிர் வெளியீடு
இனப்படுகொலைகள் எப்பொழுதுமே ஒரு அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அரசு நேரிடையாகச் செயல்படாமல், முறையாகப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட கும்பலை, வன்முறையாளர்களைப் பயன்படுத்தித் தாக்குதலை, கொலைகளை, வன்புணர்ச்சிகளை நிகழ்த்துகிறது - இனப்படுகொலை கண்காணிப்பு அமைப்பு
சோபா சக்தியின் படைப்புக்களைத் தொடர்ச்சியாக வாசித்து முடித்த சிறு இடைவெளிக்குப் பிறகு வாசிக்கும் போர் மற்றும் இன அழிப்பு குறித்த நாவல் "இரவு".
நாஜி ஹிட்லர் படையின் யூத இன அழித்தொழிப்பின் ஒரு பகுதியான "ஆஸ்விட்ச்" வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த பதினைந்து சிறுவனின் சுய சரிதை.
யூதர்களின் சொத்துகளைக் கொள்ளையடித்து, அவர்களைப் புழுவிலும் கீழான பிறவிகளாக நடத்திய நாஜிப்படை, அவர்கள் மீது கொஞ்சமும் இரக்கமற்ற குரூரமான சித்ரவதைகளை நிகழ்த்தியிருக்கிறது. வரலாற்றில் நிரந்தரமாகப் படிந்து போன ரத்த கறை.
யூதர் என்ற ஒரே காரணத்திற்காக வதைமுகாமில் அடைபட்டு, தங்களுக்கான சவக்குழிகளைத் தாங்களே தோண்டிக் கொண்ட மனிதர்களை நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் பதைபதைக்கிறது. மனிதன் குரூரமானவன். அதிலும் வெறுப்பை அடிப்படை தத்துவமாகக் கொண்டு இயங்குபவன் மிகவும் குரூரமானவன்.
வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த அனுபவத்தை யூத இனத்தின் அழிக்க முடியாத துயர சாட்சியத்தை படைத்திருக்கிறார் எலீ வீசல். அதனைச் சிறப்பான முறையில் தமிழாக்கம் செய்துள்ளார். ரவி.தி. இளங்கோவன்.
Comments
Post a Comment