Skip to main content

Posts

காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் காற்றைத் தருவிக்கும் மரங்களுக்கு இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
மொக்கராசு ஒரு விவசாயி... அவருக்கு தெரிந்தது புரிந்தது எல்லாமே விவசாயம் மட்டும் தான் அவருடைய தாத்தா, அப்பா என்று குடும்பமே பரம்பர பரம்பரையாக விவசாயம் செய்து பிழைக்கும் குடும்பம்.. அவர்களின் குடும்பத்திற்கு விவசாயம் செய்வதில் ஒரு ஆத்ம திருப்தி இருந்தது... ஊரில் ஒவ்வொருவருக்குமே தன் பசியைத் தீர்த்துக் கொள்வது மட்டும் தான் நோக்கம்... ஆனால் விவசாயிக்கு மட்டும் தான் ஊரில் உள்ள ஒவ்வொரு உயிரின் பசியையும் தீர்த்து வைப்பது நோக்கம் என்று அடிக்கடி பெருமிதம் பேசுவார் மொக்கராசு... விவசாயியைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு தருணமமும் அவரின் கண்களில் ஒரு கர்வம் மின்னல் போல வந்து போகும்... மொக்கராசுவின் ஒரே மகன் சின்ராசு... அப்பாவின் ஆசைக்காக வேளாண்மை கல்வியைத் தேர்ந்தெடுத்து படிப்பவன்.. அப்பாவின் வேலைகளில் அவருக்கு உதவியாகவும் இருந்தான்... ஆனால் உண்மையில் அவனுக்கு இந்திய ராணுவத்தில் ஒரு நாளாவது நாட்டுக்காகப் பணிபுரிய வேண்டும் என்பது வாழ்நாள் கனவு... ஆனால், தந்தையின் மனதைப் புரிந்துக் கொண்ட மகனாக தன் ஆசையை மனதிற்குள்ளேயே வைத்திருந்தான்... இருந்தாலும் அவனுள்ளே அந்த ஆசைத்தீ அணையாமல் எரிந்துக் கொண்டே இருந்...

சாவுக்குச் சமர்ப்பணம்...

ஒரு மனிதன் வாழும் வரையில் அவனது குறைகளை மட்டுமே தேடிக் கண்டுபிடித்து கொண்டாடித் தீர்க்கும் இந்த சமூகம், அதே மனிதன் இறந்த பிறகு அவனது நிறைகளையும் கொஞ்சம் சல்லடையிட்டு கண் திறந்துப் பார்க்கிறது... இந்த உலகில் அனைவருமே குறையுள்ளவர்கள் தான்...  ஆனால் குறையின் மிகப் பெரிய பலமே ஒருவனின் மற்ற நிறைகளை மறக்க வைப்பதும் மறைத்து வைப்பதும் தான்... அந்த குறைகளையே மறக்க வைத்து ஒருவனின் நிறைகளை வெளியே கொண்டு வருகிறது என்றால் "சாவு" எவ்வளவு உயர்வானது... அந்த வகையில் சாவுக்கு ஒரு பெரிய சலாம் இடலாம் என்று தோன்றுகிறது... ஆனால் ஒருவனின் நிறைகளை இந்த சமூகம் போற்றுவதற்கு அல்லது மனதார பாராட்டுவதற்கு அவனின் சாவு வரையில் காத்திருக்க  வேண்டுமா என்ன...? ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சர் வீட்டில் இருக்கும் போது அவருடைய மனைவி சாரதா  தேவி சமையலுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொண்டிருந்தார்... அப்பொழுது சிலவற்றை சல்லடையிலும், சிலவற்றை முறத்திலும் சுத்தபடுத்திக் கொண்டிருந்தார்... அமைதியாக அதைக் கவனித்துக் கொண்டிருந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதாவிடம், வாழ்க்கையில் நாம் சல்லடையாக இருப்பதை விட முறம...

மூன்றாம் உலகப் போர்...!!!

வைரமுத்துவின் வழக்கமான நாவல்களில் சற்று அல்ல அல்ல பெரிதும் மாறுபட்ட மகத்தான படைப்பு "மூன்றாம் உலகப் போர்".. புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய கணமே, ஒரு பரபரப்பு மனதைத் தன் வசப்படுத்திக் கொள்கிறது... நெஞ்சத்தின் ஓரத்தில் இதுவரை தோன்றிடாத பயமொன்று மெல்ல கசியத் தொடங்குகிறது... தன் நாவலின் பாத்திரப் படைப்புகளில், எதார்த்தத்தை அள்ளிக் கொட்டும் கவிஞர், இதில் தன் ஆதங்கத்தையும், அறிவியில் அறிவித்துள்ள அச்சங்களையும் சேர்த்து, தான் உண்டாக்கியப் பத்திரங்களின் மூலம் அறைகூவல் விடுத்திருக்கிறார்... விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியாத, அறிய விரும்பாத கருத்தமாயி... அவருக்கு உறுதுணையாக நின்று, தான் கற்ற கல்வி மற்றும் அனுபவம் மூலம் ஊரை மாற்றத் துடிக்கும் அவரின் இளைய மகன் சின்னப்பாண்டி.. ஊரை அடித்து உலையில் போடும் அவரின் மூத்த மகன் முத்துமணி... வேளாண்மை மற்றும் இயற்கை பற்றிய ஆய்வு கட்டுரை மூலம் இந்தியாவிற்கு வரும் எமிலி என்ற அமெரிக்கப் பெண்... சுனாமியில் தாய் தந்தையை இழந்த இஷிமுரா என்ற ஜப்பானிய இளைஞன்.. இவர்கள் தாம் முக்கியப் பாத்திரங்கள்... எமிலி மற்றும் இஷிமுரா பாத்திரங்கள் மூலம் நாம...
சென்னை புத்தகத் திருவிழா...!!! 'கணினி'யுகமானாலும் காகிதத்தின் மீதான மதிப்பு குறைந்து விடவில்லை.. புத்தகங்களெல்லாம் 'ஆப்'களாக மாறிக் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு காலத்த...
எதிர்பாராதவொன்று  எதேச்சையாக நிகழும் போது எதிர்பார்ப்புகள் ஏடாகூடமாக எகிறி விடுகின்றன... கார்த்திக் பிரகாசம்...
துரும்பளவு துன்பமே என்றாலும் தாராளமாக வந்து தாமதமாக செல்கிறது உறவில்...!!! இம்மியளவே இன்பமாயினும் இதமாக இதயத்திலே நின்று விடுகிறது நட்பில்...!!! கார்த்திக் பிரகாசம்...