சென்னை புத்தகத் திருவிழா...!!!
'கணினி'யுகமானாலும் காகிதத்தின் மீதான மதிப்பு குறைந்து விடவில்லை.. புத்தகங்களெல்லாம் 'ஆப்'களாக மாறிக் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு காலத்திலும் காகிதப் பூக்கள் மடிந்து விடாமல் இன்னும் மலர்ந்து கொண்டே இருக்கின்றன...
இராயப் பேட்டை YMCA வளாகத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவின் கடைசி நாளான இன்றும், வயது குறைந்த முதியவர்கள் முதல் வயதான இளைஞர்கள் வரை ஏராளமானோர் வருகைப் புரிந்திருந்தனர்...
தங்களுக்குத் தேவையான புத்தகங்களையும், தங்களுக்குப் பிடித்த பதிப்பகங்களையும் ஆவலாய் தே(நா)டினர்...
ஒரு சிறுவன் "பொன்னியின் செல்வன்" புத்தகத்தைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு அரங்குக்குள் கர்வமாகச் சுற்றித் திரிவதைப் பார்க்க முடிந்தது... அவனுடைய கர்வத்தில் கல்கியின் மதிப்பும், தமிழ் மொழியின் செல்வாக்கும், மூளைக்குள் ஒரு நிமிடம் மின்னலைப் பாய்ச்சி சென்றன...
மற்றொருபுறம், வயதான கணவன் மனைவி தம்பதி, வாங்கிய புத்தகங்களைத் தூக்க முடியாமல் தவித்து கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது...
குறிப்பிட்ட பதிப்பகங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது...
புத்தகங்கள் 'ஆப்'களாக வெளி வந்தாலும், புதிய புத்தகத்தின் பக்கங்களில் நிரம்பியோடும் அந்த நறுமணத்தை, நாசிகளின் ஊடாக மூளைக்குள் மூழ்கி, இரத்த ஓட்டத்தைச் சிலிர்க்க வைக்கும் சுகத்தை அந்த 'ஆப்'களினாலோ 'பிடிஎஃப்' களினாலோ ஒருபோதும் அளிக்க முடியாது...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment