மொக்கராசு ஒரு விவசாயி... அவருக்கு தெரிந்தது புரிந்தது எல்லாமே விவசாயம் மட்டும் தான் அவருடைய தாத்தா, அப்பா என்று குடும்பமே பரம்பர பரம்பரையாக விவசாயம் செய்து பிழைக்கும் குடும்பம்.. அவர்களின் குடும்பத்திற்கு விவசாயம் செய்வதில் ஒரு ஆத்ம திருப்தி இருந்தது...
ஊரில் ஒவ்வொருவருக்குமே தன் பசியைத் தீர்த்துக் கொள்வது மட்டும் தான் நோக்கம்... ஆனால் விவசாயிக்கு மட்டும் தான் ஊரில் உள்ள ஒவ்வொரு உயிரின் பசியையும் தீர்த்து வைப்பது நோக்கம் என்று அடிக்கடி பெருமிதம் பேசுவார் மொக்கராசு... விவசாயியைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு தருணமமும் அவரின் கண்களில் ஒரு கர்வம் மின்னல் போல வந்து போகும்...
மொக்கராசுவின் ஒரே மகன் சின்ராசு... அப்பாவின் ஆசைக்காக வேளாண்மை கல்வியைத் தேர்ந்தெடுத்து படிப்பவன்.. அப்பாவின் வேலைகளில் அவருக்கு உதவியாகவும் இருந்தான்... ஆனால் உண்மையில் அவனுக்கு இந்திய ராணுவத்தில் ஒரு நாளாவது நாட்டுக்காகப் பணிபுரிய வேண்டும் என்பது வாழ்நாள் கனவு...
ஆனால், தந்தையின் மனதைப் புரிந்துக் கொண்ட மகனாக தன் ஆசையை மனதிற்குள்ளேயே வைத்திருந்தான்... இருந்தாலும் அவனுள்ளே அந்த ஆசைத்தீ அணையாமல் எரிந்துக் கொண்டே இருந்தது...
ஒரு நாள் வயலில் வரப்பு வேலை செய்து கொண்டிருந்தான் சின்ராசு... கையில் ஒரு துண்டு செய்தித்தாளுடன் சின்ராசுவை நோக்கி மூச்சிரைக்க ஓடி வந்தான் அவனுடைய நண்பன் மூக்கையன்... ஏதும் பேசாமல் செய்தித்தாளை சின்ராசுவிடம் நீட்டினான்... "இந்திய ராணுவ படைக்கு ஆள் தேர்வு நடைபெறுகிறது; விருப்பமும் தகுதியையும் உடையவர்கள் விண்ணபிக்கலாம்" என்று செய்தியைப் படித்து இமைகளை உயர்த்தினான் சின்ராசு... இது தான் சரியான தருணம் என்று நண்பனின் ஆசையைப் புரிந்து வைத்திருந்த மூக்கையன் அறிவுறுத்தினான்...
அன்றிரவு தீர்க்கமாக முடிவெடுத்தவனாக மொக்கராசுவிடம் தன் ஆசையை முதன்முறையாக அடையாளப்படுத்தி, வாழ்நாள் கனவினைத் காட்சிப்படுத்தினான் சின்ராசு... பதில் ஏதும் பேசாமல் அதிர்ச்சியில் உறைந்தார் மொக்கராசு...
"ஏப்பா சின்ராசு... விவசாயம் செய்றது தானப்பா நம்ம பரம்பர பழக்கம்... நாலு பேரு சோறு திங்க காரணமா இருக்கிறது தானப்பா நமக்கு கௌரவம்.. அத விட்டுப்பிட்டு எங்கையோ போயி துப்பாக்கி தூக்கப் போறேன்னு சொல்றியே பா... கல்யாணம் ஆயி ரொம்ப வருசமா பிள்ளை இல்லாம, ஒத்தப் பிள்ளையா உன்னையா சாமிகிட்ட வேண்டுதல் வச்சு பெத்தா உங்காத்தா.. நீ என்னடான்னா அவள நட்டாத்துல விட்டுப்பிட்டு போறேன்றியே பா சின்ராசு.."மனம் குமுறினார் மொக்கராசு..
சின்ராசு கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, "நாலு பேத்துக்கு சோறு போடறது மட்டும் இல்ல நாட்ட எதிரிங்க கிட்ட இருந்து காப்பத்துறதும் கௌரவம் தான் அப்பா... நாட்டுக்காக உழைக்கிறத விட பெருமையான விஷயம் ஒன்னு இருக்காப்பா... விவசாயிக்கும் வீரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்.. விவசாயி நிலத்துல நிக்குறான்... வீரன் களத்துல நிக்குறான்... அவ்வளவு தான் பா... நான் உங்கள தனியா தவிக்க விட்டு போறேன்னு நினைக்காதிங்க... நான் தாய நட்டாத்துல விடப்போறேன்னு சொல்லல தாய் நாட்டுக்கு என்னால முடிஞ்சது செய்றேன்னு தான் சொல்றேன்... எனக்கு அனுமதி கொடுங்க அப்பா... நான் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேக்குற மாதிரி இருப்பேன் னு.." மூச்சே விடாம சொல்லி முடித்தான்..."
பொழுது விடிந்தது... அப்பா அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு பயிற்சித் தேர்வுக்குச் சென்றான் சின்ராசு... எல்லாத்திலும் சிறப்பாக செயல்பட்டான்.. மிகுந்த நம்பிக்கையுடன் வீடு திரும்பினான்...
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அரிசி சலித்துக் கொண்டிருந்தாள் சின்ராசுவின் அம்மா... "இது சின்ராசு வீடு தான" என்று கேட்டு தபாலைக் கொடுத்தார் தபால்காரர்... சின்ராசு உள்ளே இருந்து வெளியே வந்தான்.. தபாலைப் பிரித்துப் படித்தான்... அவன் எதிர்பார்த்ததுப் போலவே அவன் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதமும், உடனே பணியில் சேர பட்டாளத்திற்கு வரவும் அரசாணை இருந்தது..
சின்ராசுவிற்கு மிகுந்த மகிழ்ச்சி... மொக்கராசுவிடம் சொன்னான்... அவருக்கு ஒரு கண்ணில் சந்தோசமும், ஒரு கண்ணில் துக்கமும் கண்ணீராய் வந்தன... வீடுத் தேடி சென்று மூக்கையன் அளித்த அறிவுரைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சொன்னான் சின்ராசு...அடுத்த நாளே பட்டாளத்திற்குச் சென்றான்...
அப்படி இப்படி என்று, ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன... ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது.. எது போட்டாலும் விளைச்சல் இல்லை... ஒன்று மழை இல்லாமல் போய் விடுகிறது.. இல்லையென்றால் எதாவது நோய் வந்து மொத்த விளைச்சலையும் நாசமாக்கி விடுகிறது... மொத்த கிராமமே பஞ்சத்தில் பாதி கிராமமாகி இருந்தது...
பட்டாளத்தில் இருந்து வந்திருப்பதாகவும், முப்பது நாளில் வருவதாக சின்ராசு எழுதி இருப்பதாகவும் படித்துச் சொல்லி தபாலைக் கொடுத்து விட்டு சென்றார் தபால்காரர்... வறட்டுப் பஞ்சத்தில் காணாமல் போயிருந்த சந்தோஷம், மகனின் வருகைக் கடிதத்தால் பஞ்சமில்லாமல் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது மொக்கராசுவின் முகத்தில்...
பஞ்சத்தின் கொடுரம் அதிகமானது... ஊரில் உள்ளவர்கள் எல்லாம் பசியால் இறந்து கொண்டிருந்தனர்... ஒரு சிலர், மிச்ச வாழக்கையைக் காப்பற்றிக் கொள்ள கிராமத்தையே காலி செய்தனர்... மொக்கராசு மற்றும் அவரின் மனைவியின் நிலைமையும் மிக மோசமானது... பசியினாலும் நோயினாலும் கவலைக்கிடமாயினர்... "சின்ராசு வர வரைக்கும் இந்த உடம்புல உசிர கொஞ்சம் விட்டுவயி சாமி" ன்னு மொக்கராசு வேண்டிக் கொண்டே மகனின் வருகைக்காக நாட்களை உதைத்து தள்ளிக் கொண்டிருந்தார்...
இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தன... ஊருக்குச் செல்ல மிகுந்த ஆர்வமாய்க் காத்திருந்தான் சின்ராசு...
திடீரென்று எதிரி நாட்டு தீவிரவாதிகள் நம் நாட்டுக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல் வரவும் , அவர்களை தடுத்த நிறுத்த இராணுவ படையுடன் காட்டுக்குள் சென்றான் சின்ராசு.. சண்டை இரண்டு மூன்று நாட்களைக் கடந்து ஏழு நாட்கள் நடந்துக் கொண்டிருந்தது... எட்டாவது நாள் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு விட்டு மொத்த படையும் திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்...
சின்ராசுக்கு இரண்டு மகிழ்ச்சி.. ஒன்று படையை வென்றது.. இன்னொன்று ஊருக்கு செல்வது.. நண்பனிடம் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருந்தான்...
அப்பொழுது எதிர்பாராத விதமாக, பதுங்கு குழியில் ஒளிந்திருந்த தீவிரவாதி ஒருவன் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளினான்.. சின்ராசுவும் படையினரும் பதிலுக்கு சுட்டுத் தள்ளியதில் சிறிது நேரத்தில் அந்தத் தீவிரவாதி இறந்தான்.. அந்தத் தீவிரவாதி இறந்த பிறகு தான் தெரிந்தது, சின்ராசுவின் வலது மார்பிலும், இடது தோள் பட்டையிலும் நான்கு குண்டுகள் பாய்ந்திருந்தன...தீவிரவாதி இறந்ததை உறுதிச் செய்த பத்தாவது நிமிடத்தில் சின்ராசுவின் முகத்தில் சிரிப்பு இருந்தது.. ஆனால் அவன் உடலில் உயிர் இல்லை...
முப்பதாவது நாளில் சின்ராசுவின் வருகைக்காக, அந்தப் பஞ்சத்திலும் வீட்டில் கோழி அடித்து குழம்பு வைத்து காத்திருந்தனர் மொக்கராசுவும் மனைவியும்... இருட்டும் வரை இருவரும் வாசலிலே காத்திருந்தனர்.. ஆனால் சின்ராசு வரவில்லை.. மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்...
நாற்பது நாள்.... ஐம்பது நாள்... எழுபது நாள்... சின்ராசு வரவில்லை.. உயிரோடு இருந்தால் தானே வருவான்...!
பஞ்சத்தைத் தாங்கிக் கொண்டிருந்த பாசத்தின் பலம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே போனது... ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் ஆனது... பட்டினியும் வியாதியும் கூட்டு சேர்ந்து விவசாயின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தன...
தாக்குதலின் போது வீர மரணம் அடைந்த சின்ராசுவிற்கு அரசாங்கம் தங்கப்பதக்கம் அறிவித்தது..
சில நாட்கள் கழித்து..,
தன் மனைவியை அழைத்து, இன்று முழுவதும் அருகிலேயே இருக்குமாறு சொன்னார் மொக்கராசு... ஒட்டிப் போயிருந்த மனைவியின் கன்னத்தின் மீது தன் வறண்ட முத்தத்தைப் பதித்தார்... பறக்க காற்றில்லாமல் சுருண்டிருந்த ஒரு சில தலை முடிகளைக் கைகளால் கோதினார்... எலும்புகள் மட்டும் எட்டி நிற்கும் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார்... சற்று நேரத்தில் மனைவியின் கைகளில் சில கண்ணீர்த் துளிகள் விழுந்தன.. கடைசியாக விழுந்த அந்தக் கண்ணீர்த் துளியோடு இதயம் அதன் வேலையை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டது...
மொக்காராசுவின் மனைவிக் கதறி அழுதார்... ஊரில் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த மிச்ச மீதி உடல்கள் அடுத்தது நாம்தான் என்று கவலையுடன் கூடியிருந்தனர்... கண்ணீர்த் துளிகளும் அங்கு வறட்சியில் இருந்தன போலும்... ஒரு சில துளிகளுக்குப் பிறகு எவருக்கும் கண்ணீரே வரவில்லை...
மொக்காராசுவின் உடலை எடுக்கும் நேரத்தில், அவசர அவசரமாக சின்ராசு இறந்ததற்காக வந்த தந்தியையும், அரசு அறிவித்த தங்கப் பதக்கத்திற்கான தந்தியையும் தாமதமாக கொண்டு வந்து சேர்த்தார் தபால்காரர்...
அதை கேட்டவுடன் மொக்கராசுவின் மனைவி மயங்கி விழுந்தாள்... எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் ஊற்றெடுத்தது...
களத்தில் நின்றவனின் வாழ்க்கை பதக்கத்தில் முடிந்தது... நிலத்தில் நின்றவனின் வாழ்க்கை பஞ்சத்தில் முடிந்தது...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment