வைரமுத்துவின் வழக்கமான நாவல்களில் சற்று அல்ல அல்ல பெரிதும் மாறுபட்ட மகத்தான படைப்பு "மூன்றாம் உலகப் போர்"..
தன் நாவலின் பாத்திரப் படைப்புகளில், எதார்த்தத்தை அள்ளிக் கொட்டும் கவிஞர், இதில் தன் ஆதங்கத்தையும், அறிவியில் அறிவித்துள்ள அச்சங்களையும் சேர்த்து, தான் உண்டாக்கியப் பத்திரங்களின் மூலம் அறைகூவல் விடுத்திருக்கிறார்...
விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியாத, அறிய விரும்பாத கருத்தமாயி... அவருக்கு உறுதுணையாக நின்று, தான் கற்ற கல்வி மற்றும் அனுபவம் மூலம் ஊரை மாற்றத் துடிக்கும் அவரின் இளைய மகன் சின்னப்பாண்டி.. ஊரை அடித்து உலையில் போடும் அவரின் மூத்த மகன் முத்துமணி... வேளாண்மை மற்றும் இயற்கை பற்றிய ஆய்வு கட்டுரை மூலம் இந்தியாவிற்கு வரும் எமிலி என்ற அமெரிக்கப் பெண்... சுனாமியில் தாய் தந்தையை இழந்த இஷிமுரா என்ற ஜப்பானிய இளைஞன்.. இவர்கள் தாம் முக்கியப் பாத்திரங்கள்...
எமிலி மற்றும் இஷிமுரா பாத்திரங்கள் மூலம் நாம் இயற்கைக்கு ஏற்படுத்தும் இன்னல்கள் அதனால் வீணாகிப் போகும் விவசாயத்தை ஒவ்வொரு விதையாக மனதில் விதைக்கிறார்... தேவை இல்லாதபோது அதிமாக கொட்டித் தீர்க்கும் மழையினாலும், தேவைப்படும் போது ஒரு பொட்டுக்கூட எட்டிப் பார்க்காத அதே மழையினாலும் வீணாகிப் போகும் விவசாயிகளின் அவல வாழ்க்கையைக் கண் முன்னே காட்சிப் படுத்துகிறார் வைரமுத்து...
விளைந்தால் விலை இல்லை.. விலை இருந்தால் விளைச்சல் இல்லை.. இதனால் கடன் அடைந்து தற்கொலைச் செய்து கொள்ளும் விவசாயிகள் ஒருபுறம்... விளை நிலங்களையெல்லாம் ஏதோரு தனியார் கம்பெனிக்கு விற்றுவிடும் விவசாயிகள் ஒருபுறம்... பிறந்த ஊரில் பஞ்சம் பொழைக்க முடியாமல் பிறந்து வளர்ந்த ஊரின் தொப்புள்கொடியை அறுத்தெறிந்து விட்டு, பட்டணத்திற்குச் சென்று அவமானப்பட்டு சேரிகளிலும், சாலையோரங்களிலும் அகதிலாகிக் கொண்டிருக்கும் விவசாயிகள் ஒருபுறம்.. என்று விவசாயிகளின் வாழ்க்கையைக் கண்களின் ஓரங்களில் நீர்க்கசியத் தீட்டியிருக்கிறார் வைரமுத்து...
எமிலி மற்றும் இஷிமுரா பாத்திரங்கள், "ஏன் இந்தியாவைப் பிடித்திருக்கின்றது.? என்ற கேள்விக்கு அளிக்கும் பதில்கள், நாம் அறியாத, அறிந்தும் உணர்ந்திடாத நம் நாட்டின் அருமை பெருமைகளை நம் செவியில் அறைந்து உணர்த்துகின்றன". அதிலும் தன்னையே ஒரு பாத்திரமாக சில துளிகள் படைத்திருப்பது அவரின் உச்சம்...
அறிந்தும் அறியாமலும் நாம் இயற்கைக்குச் செய்யும் துரோகங்களையும் அதனால் இயற்கை நமக்கு ஏற்படுத்தும் சில இன்னல்களையும், இழப்புகளுடன்; இழப்பு ஏற்படுத்தும்/ஏற்படுத்தப் போகும் பாதிப்புகளுடன் தன் பாத்திரங்களை வாழ வைத்திருக்கிறார்...
மரங்கள் அழிப்பு.. குளங்கள் ஏரிகள் ஆக்கிரமிப்பு... ரசாயன உரம்... ரசாய உரத்தினால் மலடாகும் மண்... ஓடைகளில் சாய நீர் கலப்பு... காடுகள் அழிப்பு... அதிகளவு கார்பன் வெளியீடு... பிளாஸ்டிக் பயன்பாடு... ஆகிய இவையாவும் "இயற்கைக்கு மட்டுமல்ல, நம் சந்ததிகளுக்கு நாம் செய்யும் துரோகம்" என மனதை சாட்டையில் அடித்து சாடுகிறார்...
புவி வெப்பமயமாதல், தனியார்மயமாதல் மற்றும் தாரளமயமாதல் போன்றவை விவசாயத்தை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது; இந்த நிலை தொடர்ந்தால், அதனால் ஏற்படவிருக்கும் அபாயங்கள் என்னென்ன..? அந்த அபாயம் ஏற்படாமல் அல்லது அபாயத்தின் அளவைக் குறைப்பது எப்படி..? என அறிவியியலை அடித்தட்டு பாமரனுக்குப் புரியும் வண்ணம் எமிலி மற்றும் இஷிமுரா மூலம் விளக்கி இருக்கிறார் வைரமுத்து...
உலகமே உயிர் வாழ உணவளிக்கும் ஒரு விவசாயி, தன்னால் வாழ முடியாமல் தற்கொலைச் செய்து கொள்கிறான் அல்லது விவசாயம் செய்வதை நிறுத்தி கொள்கிறான் என்றால் அது அவனின் தனிப்பட்ட பிரச்னை அல்ல.. அது ஒரு நாட்டின் பிரச்சனை... விவசாயத்திற்கு கைக்கொடுப்பதும், விவசாயிக்குத் தோள் கொடுப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை...
புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய கணமே, ஒரு பரபரப்பு மனதைத் தன் வசப்படுத்திக் கொள்கிறது... நெஞ்சத்தின் ஓரத்தில் இதுவரை தோன்றிடாத பயமொன்று மெல்ல கசியத் தொடங்குகிறது...

நாம் இயற்கையை வாழ விடுவோம்... இயற்கை விவசாயத்தை வாழ வைக்கும்... விவசாயி நம்மை வாழ வைப்பான்...
கார்த்திக் பிரகாசம்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment