Skip to main content

Posts

ஒரு பெண்ணுக்குத் தானாக உதவ வரும் ஆணையும் ஒரு ஆணிடம் தாமாக முன்வந்து காதலைச் சொல்லும் பெண்ணையும் சமூகத்தின் சந்தேக கண்கள் சாடாமல் இருந்ததாக சான்று இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
கடற்கரை முழுதும் இருளில் மூழ்கத் தொடங்கியிருந்த நேரம்... மணலில் ஒருபுறம் மனிதர்களும் மறுபுறம் நாய்களும் இருளை தங்கள் இச்சைக்கு வசமாக்கி புணர்ந்து கொண்டிருந்தன... காற்றில் கலந்து வந்த கடலலை சாரல் அவர்களின் முகத்தில் காறி உமிழ்ந்து கொண்டிருந்தது... கார்த்திக் பிரகாசம்...
சிறுவயதில் சினிமாவிற்குக் கூட்டிச் செல்ல அம்மாவிடம் அடம் பிடிப்பேன்.. கண்டபடி அழுவேன். அழுதுக் கொண்டே இருப்பேன்.. முதுகில் இரண்டு அடி பட்டும் படாதவாறு வைத்து விடுவாள். உடனே நான் இன்னும் பலமாக அழ ஆரம்பிப்பேன்.. நான் அழுவதை பார்த்துவிட்டு, "சரி. வெள்ளிக்கிழம சாயந்தரம் கூட்டிப் போறேன் அழாதே என்பாள்".. அப்பா கண்டபடி திட்டுவார்.. சும்மா காத்தாதீங்க "பையன் பொக்குனு போய்டுவான்". நீங்க ஒன்னும் காசு தர வேணாம்" என்று சொல்லிவிட்டு என்னை அவசர அவசரமாக இழுத்துச் செல்வாள். "கண்ணு, அடுத்த மொற வீட்டுக்கு வரும் போது என்ன சினிமாவுக்குக் கூட்டிப் போறியா..? தியேட்டர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு..." இன்று அம்மா அடம் பிடிக்காமல் என்னிடம் கேட்கிறாள்.. நான் வளர்ந்துவிட்டேன்...!!! அவள் குழந்தையாகி விட்டாள்...!!! கார்த்திக் பிரகாசம்...

#அதிர்ச்சி...

உலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முக்கிய பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.. கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் போன்ற பிரச்சனைகள் இந்தியாவில் உள்ள பெண்கள் அதிகம் எதிர்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மே 2016ல் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி நம்நாட்டின் மொத்த மக்கட்தொகை கிட்டத்தட்ட 130 கோடி.. இதில் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 64 கோடி. கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் ஐம்பது லட்சம் பெண் சிசுக்கொலைகள் நடைபெற்று இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 130 கோடி மக்கட்தொகை கொண்ட ஒரு ஜனநாயக நாடொன்று, முதல் மூன்று இடத்தில் இருப்பதற்காக பெருமைப்படக் கூடிய விடயமா இது...? இதில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாக கருதப்படும் "சோமாலியா" நமக்கு அடுத்த நான்காவது இடத்திலும், "பாகிஸ்தான்" ஒன்பதாவது இடத்திலும் தான் உள்ளன... கார்த்திக் பிரகாசம்...

பட்டதாரிகளும் அரசுத் தேர்வுகளும்...

மஹாராஷ்டிராவில் நான்காம் வகுப்பு தகுதி நிர்ணயிக்கப்பட்ட, ஐந்து பேர் மட்டுமே தேவைப்படும் சுமைத் தூக்கும் தொழிலாளர் வேலைக்கு மொத்தம் 2424 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதுக்கூட பரவாயில்லை... அதில் 984 பேர் பட்டதாரிகள் மேலும் எம்.பில் படித்த ஐந்து பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். தமிழகத்தில் தான் பத்தாம் வகுப்பைத் தகுதியாகக் கொண்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பலதரப்பட்ட பட்டதாரிகளும் பாரபட்சம் பார்க்காமல் லட்சக்கணக்கில் எழுதுகிறார்கள் என்றால், மஹாராஷ்டிராவில் நான்காம் வகுப்பைத் தகுதியாகக் கொண்ட ஐந்து பேர் மட்டுமே தேவைப்படும் வேலைக்கு ஆயிரக்கணக்கில் விண்ணப்பித்திருக்கின்றனர்.. வேலையின்மையால் பட்டதாரிகளின் நிலைமை இந்த அளவுக்கு மலிந்துவிட்டதா அல்லது அரசு வேலை என்பதனால் தாங்களாகவே தங்கள் தகுதியைக் குறைத்துக் கொள்கின்றார்களா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. ஆனால் அரசு வேலைதான் வேண்டும் என்று எண்ணுபவர்கள், அவர்களது துறைச் சார்ந்த படிப்புக்கு ஏற்றாற்போல் உள்ள அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் இது போல குறைந்த தகுதியுடையத் தேர்வுகளுக்கு, அதிகம் படித்தவர்கள்...
மனுஷ்ய புத்திரனின் "மரணத்தின் தூது" என்ற கட்டுரையை படித்ததில் இருந்து, நான் இறந்த பிறகு என் மரணச் செய்தியை யாருக்கெல்லாம் கண்டிப்பாகத் தெரியப்படுத்த வேண்டும் என்ற பெயர்ப் பட்டியலை தயார் செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்... வாழ்வில் சில காலமோ அல்லது பெருங்காலமோ நம்மோடு பயணித்தவர்களுக்கு நாம் இறந்த பிறகு நம் மரணம் தெரியப்படுத்தாமல் இருப்பதும் அல்லது யாரோ ஒருவர் மூலம் வெகு நாட்களுக்கு (வருடங்களுக்கு)பிறகு தெரிய வருவதும் நாம் அவர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா..? கார்த்திக் பிரகாசம்...

சொல்லிவிடு...

உனக்கு எல்லா சந்தோஷங்களையும் நானே தர வேண்டும் என்று நினைக்கின்றேனே...!!! இதற்குப் பெயர் தான் பேராசையா..? கார்த்திக் பிரகாசம்...