மஹாராஷ்டிராவில் நான்காம் வகுப்பு தகுதி நிர்ணயிக்கப்பட்ட, ஐந்து பேர் மட்டுமே தேவைப்படும் சுமைத் தூக்கும் தொழிலாளர் வேலைக்கு மொத்தம் 2424 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதுக்கூட பரவாயில்லை... அதில் 984 பேர் பட்டதாரிகள் மேலும் எம்.பில் படித்த ஐந்து பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் தான் பத்தாம் வகுப்பைத் தகுதியாகக் கொண்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பலதரப்பட்ட பட்டதாரிகளும் பாரபட்சம் பார்க்காமல் லட்சக்கணக்கில் எழுதுகிறார்கள் என்றால், மஹாராஷ்டிராவில் நான்காம் வகுப்பைத் தகுதியாகக் கொண்ட ஐந்து பேர் மட்டுமே தேவைப்படும் வேலைக்கு ஆயிரக்கணக்கில் விண்ணப்பித்திருக்கின்றனர்..
வேலையின்மையால் பட்டதாரிகளின் நிலைமை இந்த அளவுக்கு மலிந்துவிட்டதா அல்லது அரசு வேலை என்பதனால் தாங்களாகவே தங்கள் தகுதியைக் குறைத்துக் கொள்கின்றார்களா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
ஆனால் அரசு வேலைதான் வேண்டும் என்று எண்ணுபவர்கள், அவர்களது துறைச் சார்ந்த படிப்புக்கு ஏற்றாற்போல் உள்ள அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஆனால் இது போல குறைந்த தகுதியுடையத் தேர்வுகளுக்கு, அதிகம் படித்தவர்கள் விண்ணப்பிக்கும் போது அந்தத் தேர்வுகளுக்கான குறிக்கோளே தடம் மாறிவிடுகிறது. யாருக்காக அந்த தேர்வுகள் ஏற்படுத்தப்பட்டதோ அதன் உண்மையான நோக்கம் நிறைவேறாமலேயே போய்விடுகின்றன.
ஒருவேளை உண்மையாகவே வேலையின்மையினால் தான் விண்ணப்பிக்கிறார்கள் என்றால் இத்தகைய செயல்களை, பிற்காலத்தில் கடுமையாக அச்சுறுத்தப் போகும் பெரும் அபாயம் அழைக்கும் அழைப்பு மணியாகவே கருதியாக வேண்டும்..
நன்றாக படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச ஆசைக்கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் பல பேரின் கனவுகள் அதாள பாதாளத்தில் விழுந்து விடும். பரிசோதிக்கப்படாமலேயே பலரது திறமைகள் வீணாகிப் போகும் நிலைமை ஏற்படும்.
அதேப் போல, எப்படி இருந்தாலும் வேலைக் கிடைக்காது அதற்கு ஏன் இவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் போகப் போக ஆழமாக வேரூன்றிவிட்டால், கல்வியை ஒதுக்குகின்ற ஒரு சமூகம் உருவாக ஆரம்பித்துவிடும்.
"வறுமையின் நிறம் சிகப்பு" என்ற திரைப்படத்தில் கடுமையான பசியில் இருக்கும் கமலஹாசன் சாக்கடைக்குள் விழுந்து கிடக்கும் பழத்தை எடுத்து கழுவி சாப்பிடும் நிலையில் இருப்பார். அப்பொழுது பல படித்த பட்டதாரிகள் அந்த ஒற்றை பழத்திற்காக அடித்துக் கொண்டு சண்டை போடுவது போல கற்பனையில் ஒரு காட்சி அவர் கண்முன் வந்துப் போகும். அது போன்றதொரு கொடூர நிலைமை இனி வரப்போகும் பட்டதாரிகளுக்கு ஒருபோதும் நேர்ந்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டத் தோன்றுகிறது.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment