Skip to main content

Posts

புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!

பெரிய பெரிய ஹோட்டல்கள், மால்கள், வணிக கடைகள் அபார்ட்மெண்ட்கள் எல்லாம் சீரியல் பல்புகளில் தலைக்கு குளித்து தயாராக இருக்கின்றன...!!! ஜல்லிக்கட்டு தடை, ஆசியா கப் 20-20 இந்தியா வெற்றி, மக்கள் நலக் கூட்டணி, ஸ்வாதி படுகொலை, ராம்குமார் தற்கொலை, உடுமலை பேட்டை ஆணவக் கொலை, தமிழக சட்டமன்ற தேர்தல், அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று வரலாற்றுச் சாதனை, பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம், பியூஸ் மானுஸ் கைது, நா.முத்துக்குமார் மரணம், காவிரி பிரச்சனை, ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளி, பணமதிப்பு நீக்கம், எந்திரன் 2.0 முதல் பார்வை வெளியீடு, வர்தா புயல், ஜெயலலிதா மரணம், ஓபிஎஸ் மீண்டும் முதல்வர், சோ மரணம், தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ விலகல், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வு, எனக்கு வேலைக் கிடைத்தது மற்றும் இன்னும்பல தமிழக நிகழ்வுகளை தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டது 2016...!!! நேற்று நடந்த நிகழ்வுகள் இன்று நினைவுகளாக மாறுவது போல 2016 பல நினைவுகளைத் தந்துள்ளது. அதில் நல்ல நினைவுகளைப் பொக்கிஷமா...
பேருந்தில் பின் சீட்டில் ஒரு வயதான பாட்டி யாரிடமோ போன் பேசிக்கொண்டு வந்தாள். அடுத்த முன் சீட்டிலேயே நான் உட்கார்ந்திருந்தால் அந்தப் பாட்டி பேசியது தெளிவாகக் கேட்டது. "மவனாயிருந்தாலும் மவளாயிருந்தாலும் நம்ம கைல பத்து ரூவா காசு இருந்த தான் மருவாத. அதான் காய்ச்சனா கூட பரவாலன்னு வேலைக்கு போயிட்டு வாரேன்"... இதைக் கேட்டதும் உடனடியாகத் திரும்பி பார்த்தேன். அந்தப் பாட்டி ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன. அவளுடைய கண்கள் கலங்கியதற்கு காரணம் ஜன்னலின் வழியே வீசும் பனிக்காற்றா இல்லை மனதில் விளாசும் பாசக்காற்றா..? என்று தெரியாமலேயே பேருந்து அவளை இறக்கிவிட்டு குழப்பத்துடன் கடந்து சென்றது... கார்த்திக் பிரகாசம்...

கெட்ட வார்த்தையில் நட்பு...!!!

பள்ளியில் படிக்கும் போது, ஒரு நல்ல பையனுக்கு அடையாளங்களாக கடைப்பிடிக்கப்பட்ட காரணிகளில், மிக மிக முக்கியமான ஒன்று கெட்ட வார்த்தை பேசாமல் இருப்பது. "அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா.? ஒரு கெட்ட வார்த்தைக்கூட பேசமாட்டான்.." இப்படித்தான் ஒரு நல்லவனை அடையாளப்படுத்துவோம். போடாங்க லூசு..! இது தான் பள்ளியில் படிக்கும் போது நான் பேசிய அதிகபட்ச கெட்டவார்த்தை. இதற்கே, போடாங்கன்னு வேற ஏதோ சொல்லவந்து அப்படியே மாத்திட்டான்'னு நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். ஆதலால் நல்லவன் பட்டத்தை நிலைநாட்டுவதற்காகவே முடிந்தவரை கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்ப்போம். சொல்லாத கெட்ட வார்த்தையை சொல்லிவிட்டதாகச் சொல்லி வகுப்பில் என்னை அவமானப்படுத்திவிட்டான் என்று பேசிக் கொள்ளாமல் போன நண்பர்கள் உண்டு. இனிமேல் கெட்ட வார்த்தை பேசக் கூடாதென்று சத்தியம் வாங்கிய தோழிகள் உண்டு. அதே போல நல்லவன் பட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும், எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும் கூடவே ஒரு கெட்ட வார்த்தையைச் சேர்த்துக்கொள்ளும் ஆட்கள் வகுப்பில் கண்முன்னே டான் ஆனார்கள். அவர்களுக்கென்று தனிக்கூட்டம்...
"முத்தங்களுடன் நான்" என முடித்திருந்த கடிதத்தில் முத்தங்கள் மட்டும் முடியாமல்...!!!        கார்த்திக் பிரகாசம்...

வாட்டர் பாயிண்ட்

பேருந்து நிலையங்களில் தமிழக அரசினால் அமைக்கப்பட்ட குடிநீர் விற்கும் நிலையத்தில் ஒரு லிட்டர் குடிநீர் விலை பத்து ரூபாய். மத்திய அரசின் உடனான ஒப்பந்தத்தின் பேரில் ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் "ரயில் நீர்" ஒரு லிட்டர் பதினைந்து ரூபாய். பெரும்பாலான கடைகளில் விற்கப்படுவது என்னவோ இருபது ரூபாய். நம்மூரில் திருப்பிக் கேட்டால்தான் ஐந்து ரூபாய் சில்லரைக் கிடைக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் அதே ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட "வாட்டர் பாயிண்ட்" என்று அழைக்கப்படும் கடைகளில் ஒரு ரூபாய்க்கு 300 மில்லியும், ஒரு லிட்டர் குடிநீர் ஐந்து ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆக ஒரு லிட்டர் குடிநீர்.. தி.நகர் பேருந்து நிலையத்தில் ஒரு விலை. மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு விலை. சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் ஒரு விலை. இந்த மூன்றும் குடிக்கத்தகுந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானா..! விலையின் வேறுபாட்டைப் பொறுத்து தண்ணீரின் தூய்மையும் வேறுபடுகிறதா.? இல்லை எல்லாம் ஒரே தண்ணீர் தான், ஒரு மாதிரியான தூய்மைத்தன்மை கொண்டதுதான் என்றால் விலையில் ஏன் இந்த வித்தியாசம். ...
காசில்லா நேரத்தில் வரும் "ஒயிட் போர்டு " பேருந்து கடவுளின் மீதான கரிசனத்தைக் கூட்டுகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
"விழிப்புணர்வுத் தேவை" என்ற விழிப்புணர்வே மாற்றத்திற்கான முதல் தேவை...!!! கார்த்திக் பிரகாசம்...