பள்ளியில் படிக்கும் போது, ஒரு நல்ல பையனுக்கு அடையாளங்களாக கடைப்பிடிக்கப்பட்ட காரணிகளில், மிக மிக முக்கியமான ஒன்று கெட்ட வார்த்தை பேசாமல் இருப்பது.
சொல்லாத கெட்ட வார்த்தையை சொல்லிவிட்டதாகச் சொல்லி வகுப்பில் என்னை அவமானப்படுத்திவிட்டான் என்று பேசிக் கொள்ளாமல் போன நண்பர்கள் உண்டு. இனிமேல் கெட்ட வார்த்தை பேசக் கூடாதென்று சத்தியம் வாங்கிய தோழிகள் உண்டு.
அதே போல நல்லவன் பட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும், எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும் கூடவே ஒரு கெட்ட வார்த்தையைச் சேர்த்துக்கொள்ளும் ஆட்கள் வகுப்பில் கண்முன்னே டான் ஆனார்கள். அவர்களுக்கென்று தனிக்கூட்டம் உருவானது
ஆனால் எனக்கு அந்த அளவிற்கு சாமர்த்தியம் இல்லை. ஆதலால் கெட்ட வார்த்தை பேசினால் பெருங்குற்றமென மனதில் பதிந்து கொண்டேன்.
சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் வார்த்தைகள் பேசும் அவன் ஆயிரத்து நூறு முறை " த்தா" சொல்வான். மகிழ்ச்சியானாலும் துக்கமானாலும் கோவமானாலும் அவன் உதடுகள் உச்சரிக்கும் முதல் வார்த்தை " த்தா". எந்த தலைப்பில் ஆரம்பித்தாலும் " த்தா" வரும். மூச்சு விடும்போதெல்லாம் அந்த வார்த்தையும் சேர்ந்தே வெளியே வரும்.
அந்த நண்பன் இன்று தொடர்பில் இல்லை. ஆனால் அவனைப் போன்ற ஆயிரமாயிரம் பேர்களின் ஊனிலும் உயிரிலும் மூச்சிலும் "த்தா" நிறைந்திருக்கிறது. எனக்கும் அந்த நண்பனுக்குமான உறவு அந்த வார்த்தையை உச்சரிக்கும் போதெல்லாம் புதுப்பொலிவு பெறுகிறது. அதனால்தான் என்னவோ அந்த வார்த்தை நாவிலிருந்து செல்ல மறுக்கிறது "த்தா"...!!!
கார்த்திக் பிரகாசம்...
"அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா.? ஒரு கெட்ட வார்த்தைக்கூட பேசமாட்டான்.." இப்படித்தான் ஒரு நல்லவனை அடையாளப்படுத்துவோம். போடாங்க லூசு..! இது தான் பள்ளியில் படிக்கும் போது நான் பேசிய அதிகபட்ச கெட்டவார்த்தை. இதற்கே, போடாங்கன்னு வேற ஏதோ சொல்லவந்து அப்படியே மாத்திட்டான்'னு
நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். ஆதலால் நல்லவன் பட்டத்தை நிலைநாட்டுவதற்காகவே முடிந்தவரை கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்ப்போம்.
நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். ஆதலால் நல்லவன் பட்டத்தை நிலைநாட்டுவதற்காகவே முடிந்தவரை கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்ப்போம்.
சொல்லாத கெட்ட வார்த்தையை சொல்லிவிட்டதாகச் சொல்லி வகுப்பில் என்னை அவமானப்படுத்திவிட்டான் என்று பேசிக் கொள்ளாமல் போன நண்பர்கள் உண்டு. இனிமேல் கெட்ட வார்த்தை பேசக் கூடாதென்று சத்தியம் வாங்கிய தோழிகள் உண்டு.
அதே போல நல்லவன் பட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும், எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும் கூடவே ஒரு கெட்ட வார்த்தையைச் சேர்த்துக்கொள்ளும் ஆட்கள் வகுப்பில் கண்முன்னே டான் ஆனார்கள். அவர்களுக்கென்று தனிக்கூட்டம் உருவானது
ஆனால் எனக்கு அந்த அளவிற்கு சாமர்த்தியம் இல்லை. ஆதலால் கெட்ட வார்த்தை பேசினால் பெருங்குற்றமென மனதில் பதிந்து கொண்டேன்.
சென்னை வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. நான்கு வருடங்களும் நான்கு திசையில் தெறித்து ஓடிவிட்டன. சென்னை வந்ததில் இருந்து "த்தா வார்த்தையும்" அது சார்ந்த இன்னபிற வார்த்தைகளும் மிக எளிதாக வாயில் அடிக்கடி வருகிறது. அதற்கு காரணம் ஒரு நண்பன். சென்னையின் பூர்வக்குடி.
சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் வார்த்தைகள் பேசும் அவன் ஆயிரத்து நூறு முறை " த்தா" சொல்வான். மகிழ்ச்சியானாலும் துக்கமானாலும் கோவமானாலும் அவன் உதடுகள் உச்சரிக்கும் முதல் வார்த்தை " த்தா". எந்த தலைப்பில் ஆரம்பித்தாலும் " த்தா" வரும். மூச்சு விடும்போதெல்லாம் அந்த வார்த்தையும் சேர்ந்தே வெளியே வரும்.
அந்த நண்பன் இன்று தொடர்பில் இல்லை. ஆனால் அவனைப் போன்ற ஆயிரமாயிரம் பேர்களின் ஊனிலும் உயிரிலும் மூச்சிலும் "த்தா" நிறைந்திருக்கிறது. எனக்கும் அந்த நண்பனுக்குமான உறவு அந்த வார்த்தையை உச்சரிக்கும் போதெல்லாம் புதுப்பொலிவு பெறுகிறது. அதனால்தான் என்னவோ அந்த வார்த்தை நாவிலிருந்து செல்ல மறுக்கிறது "த்தா"...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment