பேருந்தில் பின் சீட்டில் ஒரு வயதான பாட்டி யாரிடமோ போன் பேசிக்கொண்டு வந்தாள். அடுத்த முன் சீட்டிலேயே நான் உட்கார்ந்திருந்தால் அந்தப் பாட்டி பேசியது தெளிவாகக் கேட்டது.
அவளுடைய கண்கள் கலங்கியதற்கு காரணம் ஜன்னலின் வழியே வீசும் பனிக்காற்றா இல்லை மனதில் விளாசும் பாசக்காற்றா..? என்று தெரியாமலேயே பேருந்து அவளை இறக்கிவிட்டு குழப்பத்துடன் கடந்து சென்றது...
கார்த்திக் பிரகாசம்...
"மவனாயிருந்தாலும் மவளாயிருந்தாலும் நம்ம கைல பத்து ரூவா காசு இருந்த தான் மருவாத. அதான் காய்ச்சனா கூட பரவாலன்னு வேலைக்கு போயிட்டு வாரேன்"...
இதைக் கேட்டதும் உடனடியாகத் திரும்பி பார்த்தேன். அந்தப் பாட்டி ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன.
அவளுடைய கண்கள் கலங்கியதற்கு காரணம் ஜன்னலின் வழியே வீசும் பனிக்காற்றா இல்லை மனதில் விளாசும் பாசக்காற்றா..? என்று தெரியாமலேயே பேருந்து அவளை இறக்கிவிட்டு குழப்பத்துடன் கடந்து சென்றது...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment