Skip to main content

வாட்டர் பாயிண்ட்

பேருந்து நிலையங்களில் தமிழக அரசினால் அமைக்கப்பட்ட குடிநீர் விற்கும் நிலையத்தில் ஒரு லிட்டர் குடிநீர் விலை பத்து ரூபாய். மத்திய அரசின் உடனான ஒப்பந்தத்தின் பேரில் ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் "ரயில் நீர்" ஒரு லிட்டர் பதினைந்து ரூபாய். பெரும்பாலான கடைகளில் விற்கப்படுவது என்னவோ இருபது ரூபாய். நம்மூரில் திருப்பிக் கேட்டால்தான் ஐந்து ரூபாய் சில்லரைக் கிடைக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் அதே ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட "வாட்டர் பாயிண்ட்" என்று அழைக்கப்படும் கடைகளில் ஒரு ரூபாய்க்கு 300 மில்லியும், ஒரு லிட்டர் குடிநீர் ஐந்து ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஆக ஒரு லிட்டர் குடிநீர்.. தி.நகர் பேருந்து நிலையத்தில் ஒரு விலை. மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு விலை. சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் ஒரு விலை.

இந்த மூன்றும் குடிக்கத்தகுந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானா..! விலையின் வேறுபாட்டைப் பொறுத்து தண்ணீரின் தூய்மையும் வேறுபடுகிறதா.? இல்லை எல்லாம் ஒரே தண்ணீர் தான், ஒரு மாதிரியான தூய்மைத்தன்மை கொண்டதுதான் என்றால் விலையில் ஏன் இந்த வித்தியாசம்.

மத்திய அரசினாலேயே ஒரு லிட்டர் குடிநீரை ஐந்து ரூபாய்க்குக் கொடுக்க முடியும் போது, பிறகு ஏன் "ரயில் நீர்" என்ற பெயரில் ஒப்பந்தத்தின் மூலம் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.? மத்திய அரசினால் ஐந்து ரூபாய்க்கு கொடுக்க முடியும் போது, மத்திய அரசே ஏன் மற்ற ஒப்பந்தக்காரர்களைக் கோருகிறது.?

மத்திய அரசினால் ஐந்து ரூபாய்க்கு கொடுக்க முடியும் போது ஒரு மாநில அரசினால் முடியாதா.?

தனியார்வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட கல்வியின் நிலையும், கல்வி நிலையங்களின் நிலையும் நாம் அறிந்ததே. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கட்டணம் உயர்ந்தது மட்டுமின்றி கல்வியின் தரமும் மலிந்துவிட்டது. இதே போல பெட்ரோல் டீசல் விலையும் எப்பொழுது வேண்டுமானாலும் உயரும் திருப்பிக் கேள்வியெல்லாம் கேட்க முடியாது என்ற நிலையிலேயே நாட்களை நகர்த்த வேண்டியிருக்கிறது.

இப்படியே சென்றால் ஒருநாள், பொதுமக்களுக்கு குடிநீர் கொடுக்கும் பொறுப்பும் தனியார்வசம் ஒப்படைக்கப்படலாம். தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டால் பெட்ரோல் டீசலைப் போல தண்ணீரின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயரக்கூடும். பெட்ரோல் பங்க் போல தினம்தினம் விலை அதிகரிக்கும் குடிநீருக்காகவும் வரிசையில் நிற்க நேரிடலாம். கள்ள சந்தையில் குடிநீர் பதுக்கப்படலாம். குடிநீர் நிறுவன உரிமையாளர்கள் வரியை குறைக்கக்கோரி காலவரையற்ற போராட்டம் நடத்தலாம். உணவு பஞ்சம் போல் குடிநீர் பஞ்சம் ஏற்படலாம்.

இதெல்லாம் நினைத்து பார்த்தாலே உடனடியாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருக்கிறது.

நீர் நிலைகளையும் பெருக்கவும், இருக்கும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். சிறு சிறு தண்ணீர் தேக்கங்களை உண்டாக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் நீர் தேக்கங்களை தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாகத் தூய்மையானக் குடிநீர் கிடைக்க, அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...