Skip to main content

புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!

பெரிய பெரிய ஹோட்டல்கள், மால்கள், வணிக கடைகள் அபார்ட்மெண்ட்கள் எல்லாம் சீரியல் பல்புகளில் தலைக்கு குளித்து தயாராக இருக்கின்றன...!!!

ஜல்லிக்கட்டு தடை, ஆசியா கப் 20-20 இந்தியா வெற்றி, மக்கள் நலக் கூட்டணி, ஸ்வாதி படுகொலை, ராம்குமார் தற்கொலை, உடுமலை பேட்டை ஆணவக் கொலை, தமிழக சட்டமன்ற தேர்தல், அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று வரலாற்றுச் சாதனை, பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம், பியூஸ் மானுஸ் கைது, நா.முத்துக்குமார் மரணம், காவிரி பிரச்சனை, ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளி, பணமதிப்பு நீக்கம், எந்திரன் 2.0 முதல் பார்வை வெளியீடு, வர்தா புயல், ஜெயலலிதா மரணம், ஓபிஎஸ் மீண்டும் முதல்வர், சோ மரணம், தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ விலகல், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வு, எனக்கு வேலைக் கிடைத்தது மற்றும் இன்னும்பல தமிழக நிகழ்வுகளை தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டது 2016...!!!

நேற்று நடந்த நிகழ்வுகள் இன்று நினைவுகளாக மாறுவது போல 2016 பல நினைவுகளைத் தந்துள்ளது. அதில் நல்ல நினைவுகளைப் பொக்கிஷமாக்குவோம். கெட்ட நினைவுகளைக் கடக்க முயற்சிப்போம். துக்க நினைவுகளை (கழிவுகளை) 2017ம் ஆண்டிற்கு உரமாயிடுவோம். அதில் நல்ல நிகழ்வுகள் பூக்களாய் பூக்கட்டும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...