சமிபத்தில் செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி மனதை மிக பாதிப்பதாக இருந்தது. அதே சமயத்தில் அந்த செய்தி, நம் நாட்டில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை மனதில் ஆழ பதித்து நின்றது. சிரியாவில் புகைப்படக் கலைஞர் ஒருவர், அகதிகள் முகாமிற்கு புகைப்படங்கள் எடுப்பதற்காக சென்றுள்ளார். எதிரே சிறு பெண் குழந்தை வர, அந்த குழந்தையை புகைப்படம் எடுப்பதற்காக தனது புகைப்படக் கருவியை எடுத்து உயர்த்தியுள்ளார். ஆனால் அந்த குழந்தை அதை துப்பாக்கி என்று தவறாக நினைத்து கொண்டு, இன்று தனக்கு மரணம் நிச்சயம் என்று யூகித்து மரண பயத்தில் தன் கண்களில் நீர்த் தேங்க இரு கைகளையும் உயர்த்தி நின்றுள்ளது. எந்நேரமும் துப்பாக்கிக் குண்டு சத்தமும், கண் எதிரே துப்பாக்கி ஏந்தி செல்பவர்களை ஏந்தி செல்வதைப் பார்த்தப்படியால் அந்த புகைப்படக் கருவியை துப்பாக்கி என்றும், புகைப்படக்காரரை தீவிரவாதி என்றும் நினைத்து பயந்துள்ளது அந்த பிஞ்சு குழந்தை.. கார்த்திக் பிரகாசம்...