தொழிற்சாலைகளில் மற்றும் கம்பெனிக்களில் பணியாற்றும் பெரும்பாலானோருக்கு, அந்த வேலை பிடித்திருக்கிறதோ இல்லையோ, அங்கு அவர்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கு முக்கிய காரணம் அந்த கம்பெனியில் அமைந்த நட்பு வட்டம்.. அந்த நட்பு வட்டம் மட்டும் இல்லாவிட்டால், பெரும்பாலோனோரின் "பணி வாழ்கை" என்பது "பரணில் வைக்கப் பெற்ற கேட்பாரற்று கிடக்கும் பழைய பாத்திரத்தைப் போல தனிமையிலும் வெறுமையிலும்" தான் இருக்கும்.. குடும்ப சூழ்நிலை என்று ஒன்று இருந்தாலும், அந்த நட்பு வட்டம் தான் அவர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்.. அத்தகைய நட்பு வட்டத்தில் இருந்து, அடுத்த வேலை, புது பிசினஸ், கல்யாணம் என்று வெவ்வேறு காரணங்களுக்காக ஒருவர் ஒருவராக விலகும் போது, மீதி இருக்கும் மற்றவர்களுக்குத் தன்னிச்சையான ஒரு ஐயம் தொற்றிக் கொள்ளும்.. அந்த ஐயம் ".. அவன் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டான். நாம் இன்னும் அப்படியே இருக்கிறோமே...!!!" என்ற ஆதங்கத்தினால் ஏற்படும் ஐயம் அல்ல.. இவர்களால் "நான் இல்லை நீ இல்லை" என்று நகர்ந்துக் கொண்டிருந்த நாட்களை, இனி இவர்கள் இல்லாமல் எப்படி துரத்துவது என்ற பிரிவி...