தொழிற்சாலைகளில் மற்றும் கம்பெனிக்களில் பணியாற்றும் பெரும்பாலானோருக்கு, அந்த வேலை பிடித்திருக்கிறதோ இல்லையோ, அங்கு அவர்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கு முக்கிய காரணம் அந்த கம்பெனியில் அமைந்த நட்பு வட்டம்.. அந்த நட்பு வட்டம் மட்டும் இல்லாவிட்டால், பெரும்பாலோனோரின் "பணி வாழ்கை" என்பது "பரணில் வைக்கப் பெற்ற கேட்பாரற்று கிடக்கும் பழைய பாத்திரத்தைப் போல தனிமையிலும் வெறுமையிலும்" தான் இருக்கும்.. குடும்ப சூழ்நிலை என்று ஒன்று இருந்தாலும், அந்த நட்பு வட்டம் தான் அவர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..
அத்தகைய நட்பு வட்டத்தில் இருந்து, அடுத்த வேலை, புது பிசினஸ், கல்யாணம் என்று வெவ்வேறு காரணங்களுக்காக ஒருவர் ஒருவராக விலகும் போது, மீதி இருக்கும் மற்றவர்களுக்குத் தன்னிச்சையான ஒரு ஐயம் தொற்றிக் கொள்ளும்..
அந்த ஐயம் ".. அவன் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டான். நாம் இன்னும் அப்படியே இருக்கிறோமே...!!!" என்ற ஆதங்கத்தினால் ஏற்படும் ஐயம் அல்ல.. இவர்களால் "நான் இல்லை நீ இல்லை" என்று நகர்ந்துக் கொண்டிருந்த நாட்களை, இனி இவர்கள் இல்லாமல் எப்படி துரத்துவது என்ற பிரிவின் தனிமையை உணர்த்தும் வலியினால் ஏற்படும் ஐயம்.
ஒவ்வொருவராக விலகிய பின், கடைசியாக இருக்கும் இருவரின் நிலை தான் ரொம்ப பரிதாபம்.. அந்த இருவரின் மனசுக்குள்ளும், "எப்படியாவுது இவனுக்கு முன் இந்த வேலையை விட்டு நாம் சென்று விட வேண்டும்" என்ற எண்ணம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். காரணம் அந்த நட்பு வட்டம் இல்லாததால்...!!! அந்த தனிமையொடு போரிடும் திறன் இல்லாததால்...!!!
அதிலும் ஒருவன் சென்றுவிட்டால் கடைசியாக இருப்பவனின் கதி "அதோகதி" தான். அந்த தருணத்தில் இருந்து அந்த கடைசியானவனுக்கு இதுவரையில் இல்லாத அளவு வேலையின் மீது வெறுப்பு அதிகரிக்கும். தனிமை துரத்தும்.. புதிதாக நண்பர்கள் கிடைப்பார்கள் ஆனால் அதில் மனம் லயிக்காது. வேற வேலை அவசர அவசரமாகத் தேடுவான். அப்பொழுது கூட வேலை தேடுவதற்கு முதற் காரணம் அவன் புரிந்துக் கொண்டிருக்கும் அந்த வேலையின் மீதான வெறுப்பல்ல. அந்த நட்பு வட்டம் தான்...!!! அந்த நட்பு வட்டத்தின் பிரிவு தான்...!!! துரத்திக் கொண்டிருக்கும் அதன் நினைவுகள் தான்...!!!
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment