பெண்ணியத்தின் மொத்த பிம்பமாய்
தேவதையின் மறு பிரதியாய்
கண்ணெதிரே நீ...!!!
என் கரம் பிடிக்க பிறந்தவளை
கண்டுவிட்டதாக "கண்கள்"
உன் உருவத்தை மனதிற்கு
ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கின்றன
காதல் அலைவரிசையில்...!!!
கண்டுக்கொள்ளாத கடவுளின் மீதும்
கணிசம் கரைப் புரண்டது
என் கண்களில் உன்னை
தோன்ற செய்ததனால்...!!!
உன் மூக்குத்தி முனுகல்களும்
வளவியின் வஞ்சகமில்லா வருடல்களும்
சின்ன கொலுசுகளின் செல்ல சிணுங்கல்களும்
என்னுள் ராஜாவும் ரஹ்மானும் ஒன்றாக
அமர்ந்து அமைத்தது போன்ற ஓர்
உற்சாக மெட்டை உடலுக்குள்
உயிராய் உலவவிட்டது...!!!
என் காதலுக்காகவும் காதலிக்காகவும்
உணர்வுகளில் ஒன்றை கூட
ஒதுக்காமல் அந்த உற்சாக மெட்டிற்கு
வரிகளை வடித்துக் கொண்டிருக்கின்றன
என் இரவுகள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
தேவதையின் மறு பிரதியாய்
கண்ணெதிரே நீ...!!!
என் கரம் பிடிக்க பிறந்தவளை
கண்டுவிட்டதாக "கண்கள்"
உன் உருவத்தை மனதிற்கு
ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கின்றன
காதல் அலைவரிசையில்...!!!
கண்டுக்கொள்ளாத கடவுளின் மீதும்
கணிசம் கரைப் புரண்டது
என் கண்களில் உன்னை
தோன்ற செய்ததனால்...!!!
உன் மூக்குத்தி முனுகல்களும்
வளவியின் வஞ்சகமில்லா வருடல்களும்
சின்ன கொலுசுகளின் செல்ல சிணுங்கல்களும்
என்னுள் ராஜாவும் ரஹ்மானும் ஒன்றாக
அமர்ந்து அமைத்தது போன்ற ஓர்
உற்சாக மெட்டை உடலுக்குள்
உயிராய் உலவவிட்டது...!!!
என் காதலுக்காகவும் காதலிக்காகவும்
உணர்வுகளில் ஒன்றை கூட
ஒதுக்காமல் அந்த உற்சாக மெட்டிற்கு
வரிகளை வடித்துக் கொண்டிருக்கின்றன
என் இரவுகள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment