மூன்றாம் உலகப் போர் மூண்டால், அதற்கான காரணம் கண்டிப்பாக தண்ணீராகத் தான் இருக்கும் என்று ஏற்கனவே அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.. இந்த நிலையில் இந்தியாவிலுள்ள நதிகள் எல்லாம் இணைக்கப்பட்டால் கண்டிப்பாக தண்ணீர் பிரச்சனை தீரும். அதில் எந்த விதமான சந்தேகமும் இருப்பதாகத் தோன்றவில்லை.
ஆனால் நம் சமூகத்தில் நாளுக்கு நாள் பரந்த மனப்பான்மை மறைந்து குறுகிய மனப்பான்மை பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. தன்னை பற்றிய நினைப்பு மட்டுமே எப்பொழுதும் மேலோங்கி நிற்கிறது. ஒருவன் அடுத்த வேளை உணவுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்கு ஒரு கூட்டம் அடுத்த நான்கு நாட்களுக்கான உணவைப் பத்திரப்படுத்த நினைக்கிறது.
உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்தும், ஒரு அரசாங்கம் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. அதையும் மீறி தண்ணீர் திறந்து விடச் சொல்லும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக துணை ராணுவத்தை அழைக்கும் அளவுக்கு நம் நாட்டிற்குள்ளேயே மனித நேயம் செத்துக் கொண்டிருக்கிறது. சட்டத் திட்டங்கள் வலுவிழந்துக் கொண்டிருக்கின்றன.
ஆக நாளைக்கே இந்தியாவிலுள்ள நதிகளெல்லாம் இணைக்கப்பட்டாலும் அதன் உண்மையான, முழுமையான பலனென்பது, யாருக்கும் பாதகம் ஏற்படாத வகையில் அரசு வகுக்கும் சட்டத் திட்டங்களிலும், நம்மிடையே மண்டிக் கிடைக்கும் மனிதநேயம் மீண்டும் உயிர் பெரும் பட்சத்திலேயே மட்டும் தான் நாட்டிலுள்ள கடைசி குடிமகனுக்கும் அடிப்படை தேவையான நீராதாரமென்பது உறுதிப்படுத்தப்படும்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment