Skip to main content

Posts

Showing posts from February, 2018

தொலைத்தேன்

தொலைத்தேன் நேற்றைய ஏமாற்றங்களில் இன்றைக்கான தேவைகளில் நாளைக்கான எதிர்ப்பார்ப்புகளில் என்னைத் தொலைத்தேன்...! நான் என்னைத் தொலைத்தேன்...! கார்த்திக் பிரகாசம்...

வேர்க்கடல

இரயில் மொரப்பூரில் நின்றது. "வேர்க்கடல.. வேர்க்கடல" வண்டி நின்றதும் இரு பெண்கள் அவித்த வேர்க்கடலைகளைப் பைகளில் அடைத்துக் கொண்டு, "வேர்க்கடல வேர்க்கடல..!" என்று கூவியபடியே இரயில் பெட்டியின் இருபுறமும் ஏறினர். 'ஏய்.. நீ இந்தப்பக்கம் ஏறீட்டியா...' ஏறிய பெண்களில் ஒருத்திக் கேட்டாள். "ஆமா. உனக்கென்ன.?" இவள் கேள்விக் கேட்டப் பெண்ணைப் பார்த்து சொன்னாள். "உனக்கென்னவா..! பக்கத்து பொட்டியில உன் புருஷன் ஏறிட்டான்னு இந்தப் பொட்டிக்கு அவசர அவசரமா ஓடிவந்தா இதுல நீ ஏறிக்கிட்ட.. ஏன் நீயும் உன் புருஷனும் மட்டும்தான் பொழைக்கனுமா நாங்கயெல்லாம் பொழைக்கவே கூடாதா." இவள் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகி கோபத்தில் வரிந்து கட்டினாள். 'அடியே.. ரொம்ப பேசுனினா ஓடுற வண்டில இருந்து தள்ளி விட்ருவன் பாத்துக்க''. அவளும் பதிலுக்கு எகிறினாள். சண்டைப் போட்டு கொண்டிருக்கும் அதே நேரம் வியாபாரத்திலும் இருவரும் மும்மரமாக இருந்தனர். 'தள்ளுவ தள்ளுவ. நீ உதைக்கிற வரைக்கும் நான் இடுப்ப காட்டிட்டு சும்மா நிப்பன்னு நினைச்சியா. உன்னையும் இழுத்த...

கடைசி மூச்சு

ஒவ்வொரு பாகமும் தான்  பார்த்த வேலையை தயவு தாட்சணியம் பாராமல் ராஜினாமா செய்ய முகம் வீங்க கைக் கால்கள் அசைய மறுக்க உணர்வற்றுப் போக சுய நினைவுகள் நிலைக்குலைய அடையாளங்கள் மறக்க குழந்தைப் போல் பிதற்ற பெற்றெடுத்து அலைந்து திரிந்து  தூக்கி வளர்த்த ஜீவனின்று மரணத்தின் விளிம்பில் கரையொதுங்க உயிர் ஒதுங்க  உடல் மிதக்க நிற்கிறது இது இயற்கை வயதானால் நேருவது எல்லாருக்கும் நிகழ்ந்தே தீருவது  மரணமென்பது ஒரு செயல் வாழ்வின் ஒரு நிகழ்வு தவிர்க்க முடியாதது தடுக்கவும் முடியாதது அது உடலுக்கும் உருவத்துக்கும் மட்டுமான முடிவு புத்திக்கு முடிந்தளவு மூளைக்குள் ஆறுதல் அலையை அனுப்புகிறது அவற்றையெல்லாம் சரியென்ற ஒற்றை வார்த்தையில் திருப்பியனுப்பி விட்டு கிடையாய் கிடந்துத் துடிக்கிறது மனது முதல் மூச்சு தந்த உந்தன் கடைசி மூச்சில் கண்ணீர்ச் சிந்தி அழுகிறேன் முதல்முறையாகத் துடைத்துவிட உன் கைகள் எழவில்லை.    கார்த்திக் பிரகாசம்...
ஒப்பந்தமில்லா காதலில் ஒப்பனையற்ற அழகில் உருகியோடும் காமத்தில் வழிந்தோடும் அன்பில் நிறைந்தாடும் நினைவில் மாறித் துடிக்கும் இதயத் துடிப்பில் கடைசியாய் கண்ட முத்தத்தில் விலக மறுக்கும் விரல்களின் நுனியில் ஒட்டிக் கிடந்த பாதங்களின் தூசியில் நாங்கள் தினந்தினம் பிணைகிறோம் தினந்தினம் மரிக்கிறோம் தினந்தினம் பிறக்கிறோம்....!!! கார்த்திக் பிரகாசம்...
இது உயிர் பிரிவதால் நேரும் சாதல் அல்ல... உணர்வுக் கீறல்களால் உண்டாகும் சாதல்... முன்னது வலியும் துயரமும் பின்னது உயிர்ப்பும் அழுகையும்... அழுகிறேன் ஆனால் கண்ணீர் வரவில்லை அழுவதற்குக் கண்ணீரும் ஈரமும் அவசியமில்லை விளம்பர அழுகைக்குத் தான் கண்ணீர் அத்தியாவசியம் உள்ளங்களறிந்த உணர்ச்சிக் கடலின் அழுகைக்கு அல்ல... இதோ நான் சாகிறேன் ஆனால் உயிர் பிரியவில்லை நான் அழுகிறேன் ஆனால் கண்ணீர் உதிர்க்கவில்லை... கார்த்திக் பிரகாசம்...
சென்ற காதல்கள் வாழ்வித்திட வந்த காதல்கள் வாழ்த்திட நின்ற காதல்கள் வாழ்ந்திடவே...!!! கார்த்திக் பிரகாசம்...
"உனக்கு எவ்வளவோ பரவால்ல கார்த்தி. சென்னைக்குப் போய் அஞ்சாறு வருஷத்துக்கு மேல ஆச்சு ஆனாலும் உன் தலைல இன்னும் "முடி" நெறைய கெடக்கு. என் பையனுக்கெல்லாம் சென்னைக்குப் போன ஒரு வருஷத்துலேயே தலைலயிருந்த மொத்தமும் கொட்டிப் போயிடுச்சு. என் பையனுக்கு மட்டும் இல்ல அவன்கூட இருந்த எல்லாத்துக்குமே கொட்டிப் போச்சு. கல்யாணத்தப்ப வெறும் தலையோட தான் நின்னானுங்க. நீயாவது கவனமா முடி'ய பாத்துக்க இல்லன்னா ரொம்ப கஷ்டம். 'முடி'யிருந்தா தான் சீக்கிரம் கல்யாணம் முடியும்'..." கையில் டீயைக் கொடுத்துவிட்டு கடகடவென்று பேசி முடித்தார் அந்தப் பெரியம்மா.  டீக் குடிக்கத் தொடங்கினேன். டீ உள்ளிறங்க இறங்க சிந்தனைகள் மெள்ள மெள்ள வெளிவந்தன.   பையனின் பழக்க வழக்கம், குணம், வேலை, சம்பளம், சொத்து மதிப்பு ஆகியவற்றுடன் "தலையில் முடியிருக்க வேண்டும்" என்பதும் கல்யாணத்திற்கான மிக முக்கியமானதாகக் கருதப்படும் அடிப்படை எதிர்பார்ப்புகளில் ஒன்றாகிவிட்டது போலிருக்கிறது.  அதே போல, "சென்னைக்குப் போனால் ஏதாவது ஒரு வேலைச் செய்து வயிற்றைக் கழுவிக் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்...
என்னை ஏன் குழப்புகிறாய்..? தெளிவாக்க தான்...! அது சரி...! தெளிவாகக் குழப்புகிறாய்...! கார்த்திக் பிரகாசம்...