ஒவ்வொரு பாகமும் தான்
பார்த்த வேலையை
தயவு தாட்சணியம் பாராமல்
ராஜினாமா செய்ய
முகம் வீங்க
கைக் கால்கள் அசைய மறுக்க
உணர்வற்றுப் போக
சுய நினைவுகள் நிலைக்குலைய
அடையாளங்கள் மறக்க
குழந்தைப் போல் பிதற்ற
தயவு தாட்சணியம் பாராமல்
ராஜினாமா செய்ய
முகம் வீங்க
கைக் கால்கள் அசைய மறுக்க
உணர்வற்றுப் போக
சுய நினைவுகள் நிலைக்குலைய
அடையாளங்கள் மறக்க
குழந்தைப் போல் பிதற்ற
பெற்றெடுத்து
அலைந்து திரிந்து
தூக்கி வளர்த்த
ஜீவனின்று
மரணத்தின் விளிம்பில்
கரையொதுங்க
உயிர் ஒதுங்க
உடல் மிதக்க நிற்கிறது
அலைந்து திரிந்து
தூக்கி வளர்த்த
ஜீவனின்று
மரணத்தின் விளிம்பில்
கரையொதுங்க
உயிர் ஒதுங்க
உடல் மிதக்க நிற்கிறது
இது இயற்கை
வயதானால் நேருவது
எல்லாருக்கும் நிகழ்ந்தே தீருவது
மரணமென்பது ஒரு செயல்
வாழ்வின் ஒரு நிகழ்வு
தவிர்க்க முடியாதது
தடுக்கவும் முடியாதது
அது
உடலுக்கும் உருவத்துக்கும்
மட்டுமான முடிவு
வயதானால் நேருவது
எல்லாருக்கும் நிகழ்ந்தே தீருவது
மரணமென்பது ஒரு செயல்
வாழ்வின் ஒரு நிகழ்வு
தவிர்க்க முடியாதது
தடுக்கவும் முடியாதது
அது
உடலுக்கும் உருவத்துக்கும்
மட்டுமான முடிவு
புத்திக்கு முடிந்தளவு மூளைக்குள்
ஆறுதல் அலையை அனுப்புகிறது
அவற்றையெல்லாம்
சரியென்ற ஒற்றை வார்த்தையில்
திருப்பியனுப்பி விட்டு
கிடையாய்
கிடந்துத் துடிக்கிறது மனது
ஆறுதல் அலையை அனுப்புகிறது
அவற்றையெல்லாம்
சரியென்ற ஒற்றை வார்த்தையில்
திருப்பியனுப்பி விட்டு
கிடையாய்
கிடந்துத் துடிக்கிறது மனது
முதல் மூச்சு தந்த
உந்தன் கடைசி மூச்சில்
கண்ணீர்ச் சிந்தி
அழுகிறேன்
முதல்முறையாகத் துடைத்துவிட
உன் கைகள் எழவில்லை.
உந்தன் கடைசி மூச்சில்
கண்ணீர்ச் சிந்தி
அழுகிறேன்
முதல்முறையாகத் துடைத்துவிட
உன் கைகள் எழவில்லை.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment