நேர் வெயில் நெடுநெடுவென நெற்றியில் ஏறிக் கொண்டிருந்தது. மரம் துளிக்குக் கூட அசையவில்லை. அசலூரில் உத்யோகம் பார்க்கும் மகனின் வரவுக்காக காத்திருக்கும் பெத்தவளைப் போல காற்றை எதிர்பார்த்து மீளாத துயரத்தில் சரிந்திருந்தன கிளைகள். நிழலை விரிக்க அவற்றிடம் கொஞ்சமும் திராணியில்லை. நுதத்தைச் சுருக்கிக் கொண்டு - நடக்கும் தோரணையில் தெருவில் ஊர்ந்துச் செல்லும் மனித உருப்படிகளின் கண்களில் தழும்பியபடி - அலைகளற்ற கானல் கடலொன்று அவ்வப்போது தோன்றி மறைந்துக் கொண்டிருந்தது. நெடுநாட்களுக்கு முன்னர் பக்கத்துத் தேசத்துக்குப் பறந்துவிட்ட பறவைக் கூட்டம், பிறந்த மண்ணுக்கு இன்னமும் திரும்பியிருக்கவில்லை.
'பசிவேற வயித்தக் கிள்ளுது'
மதிய சாப்பாட்டிற்கு வராத கணவனைத் திட்டிக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தாள் அழகம்மா.
"நேரங் கெட்ட நேரத்துல வந்து சாப்புட வேண்டியது அப்றம் சாப்பாடு சேரல ஜீரணம் ஆகலனு ஏப்பம் ஏப்பமா விட்டுக்கிட்டு ஏகத்துக்கும் என்னைய புடிச்சித் திட்ட வேண்டியது. இதே வேலையா போச்சு இந்த மனுசனுக்கு. எத்தனத் தடவ சொல்றது. கேட்டா தான... " இன்னும் அவள் புலம்பலை நிறுத்தவில்லை.
நிறுத்தவும் மாட்டாள்.
கணவன் வீட்டில் இல்லாத போது அவனுக்குக்கான அறிவுரைகளையும் - வசவுகளையும் - அவன் மீதான அதிருப்திகளையும் - ஏமாற்றங்களையும் புலம்பியபடியே இருப்பாள். உணர்வு மீறிப் போகும் சில வேளைகளில் கெட்ட வார்த்தையில் கூட சத்தமாக ஏசுவாள். நெஞ்சில் அனலடிக்கும் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்க்கும் வடிகாலாகவே அவளது புலம்பல் பேச்சுகள் இருக்கும்.
ஆரம்பத்தில் "என்னாச்சு.. என்ன பெரச்சினனு தெரியலயே.. ஏதோ பெரிய வெவகாரமா இருக்குமோ. நாம போயி ஒரு எட்டு கேட்டுட்டு வந்தரலாமா" என்று அக்கம்பக்கத்தினர் யோசித்துக் கொண்டிருந்தனர். இன்று வரையிலும் அவர்கள் யோசித்துக் கொண்டு மட்டுமே இருக்கின்றனர்.
மனதின் ஓரத்தில் ஒட்டியிருக்கும் கடைசிச் சொட்டு இரக்கம் இன்னமும் உலராததால் - எவரும் முன்வராத போதிலும் - யாரையும் எதிர்பார்க்காமல் - ஒருத்தரையும் துணைக்குக் கூப்பிடாமல் எதிர்த்த வீட்டு வாசுகி ஒருநாள் தனியாளாகப் போய் அழகம்மாவிடம் பேச்சுக் கொடுத்தவாறே இடைச் செருகலாய் இதைக் கேட்டாள்.
"ஏக்கா. எதுக்கு பொழுதெல்லாம் இப்பிடி பொலம்பிட்டே கெடக்க" கேட்டதும் தரையில் பாயை விரிப்பது போல் வெடுக்கென்றுத் தலையைக் குனிந்துக் கொண்டாள்.
சிறிது மௌனத்திற்குப் பின் கடமைக்காக அழகம்மாவின் உதடுகள் சற்றே விரிந்தன.
"பொம்பளையா பொறந்து ஒரு போக்கெத்தவன்கிட்ட முந்திய விரிச்சி முக்கா பொணமா நடமாடிட்டு இருக்கனே... பின்ன பொலம்பாம என்னடி பண்றது"
சலனமே இல்லாமல் சொன்னாள் அழகம்மா.
அவளது புலம்பலுக்குப் பின்னுள்ள வேதனையைப் பற்றிக் கண்டுக்கொள்ளாமல் அதே சமயம் எப்போதும் அதை எதிர்நோக்கிபடியே அக்கம்பக்கத்தினர் இருந்தார்கள். உதாரணமாக ஒருசில நாள் அவளின் புலம்பல் சத்தம் கேட்கவில்லையென்றால், " என்ன பொழுது சாயப் போகுது. இன்னமும் அழகம்மா பொலம்ப ஆரம்பிக்கல" என்று தங்களுக்குள் கிண்டலாகப் பேசிக் கொண்டனர். அவளுடைய சத்தம் காதில் விழுந்ததும்,
"அத்தான. அவளோட பொலம்ப சத்தம் கேக்காம சூரியன் ஒருநாளும் மேக்கால மறஞ்சதில்லயே" என்று இளக்காரமாகப் சிரித்துப் பேசித் தங்களின் அன்றாட கடமையை செவ்வனே முடித்துக் கொண்டனர்.
பொழுதுபோவது தெரியாமல் தொய்வின்றி வேலையைக் கவனிப்பதற்காகப் பண்பலையின் ஏதாவதொரு பாடலையோ - செய்தியையோ - செவிக்குள் ஓட விடுவதைப் போல, அவளது புலம்பல் சத்தம் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காக நேரத்தைச் சிரத்தையில்லாமல் தள்ள தினம்தினம் அவர்களுக்கு பெரும் உதவியாய் இருந்தது.
ஆனால் அழகம்மாவின் புலம்பல் சத்தமெல்லாம் அவளுடைய கணவன் வீட்டிற்கு வரும்வரை மட்டும் தான். அவன் வீட்டை அடைந்த அடுத்த கணத்திலிருந்து மீண்டும் அவன் வெளியே கிளம்பும் வரை அவளின் குரல் ஒசந்துக் கேட்டதாய் அத்தெருவின் பதிவுகளில் எங்குத் தேடினாலும் கிடைக்காது.
கதவைத் திறந்து வெளியே வந்த அழகம்மாவின் கண்களில் வாசுகி தான் முதலில் தென்பட்டாள்.
துணித் துவைக்கும் கல்லை உற்று நோக்கியவாறு கண்களைச் சிமிட்டாமல் வாசற் படியில் அமர்ந்திருந்தாள். உருண்டு திரண்டிருந்த பெரிய கண்ணீர்த் துளியொன்று அவளது விழிகளின் விளிம்பில் ஆழ்கடலாய் பெருக சமயம் பார்த்திருந்தது.
வாசுகியின் அருகில் சென்றாள் அழகம்மா.
"என்னடி வாசுகி. பெரம புடிச்சவ கணக்கா வீட்டு வாசல்ல ஒக்காந்துட்டு இருக்குறவ"
உறைந்துப் போன பனிக்கட்டியாய் பதிலேதும் சொல்லாமல் மெல்ல மெல்ல உருகிக் கொண்டிருந்தாள் வாசுகி.
"ஏன்டி. இங்க ஒருத்தி கேட்டுகிட்டு நிக்கிறேன். ஓம்பாட்டுக்கு இருக்க"
அருகில் சென்று வாசுகியின் தலையைத் தொட்டு அமர்ந்தாள் அழகம்மா.
தேக்கி வைத்திருந்த கண்ணீர்க் கடல், அலை அலையாய் அழகம்மாவின் மார்பில் அடிக்கக் கதறி அழுந்தாள் வாசுகி.
'அடியேய். என்னடி ஆச்சு. எதுக்கு இப்பிடி அழுவுறவ'
அழகம்மா பதறினாள்.
"கல்யாணம் ஆயி பத்து வருஷம் ஆச்சு. போன ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேனோ. இதுவரைக்கும் வயித்துல ஒரு கொழந்த தங்கல. ஏறாத கோயில் இல்ல செய்யாத பூஜ இல்ல வேண்டிக்காத நேத்திக் கடன் இல்ல. நானும் வரலட்சுமி கோயில் மரத்துல தொட்டில் கட்டுனேன் - மாரியம்மனுக்கு தெனமும் வெளக்கு வச்சேன் - அங்க பிரதேசனம் செஞ்சேன் - மண்சோறு சாப்டேன். அம்மனுக்கு பட்டுப் பொடவ சாத்துனேன் - சுமங்கலி பொண்ணுங்களுக்கு மஞ்சளும் குங்குமமும் தந்தேன். இவ்வளோ செஞ்சியும் அந்தச் சாமி கண் தெறக்கவே இல்லயே"
மூக்கைச் சிந்தி முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
சரி இதுக்கு மேலயும் சாமி - கோயில் - பரிகாரம் - கடவுள்னு நம்பிகிட்டு கெடந்தா, இல்லாத ஊருக்கு வழித் தேடுன கதையா ஆயிடுமேனு போன மாசம் ஆஸ்பத்திரிக்குப் போனேன். அதுவும் அந்த மனுசனுக்குத் தெரியாம தான்.. தெரிஞ்சா என்ன மயித்துக்குப் போனனு அதுக்கு வேற காட்டுக் கத்துக் கத்துவான்.
டேட்லாம் கரெக்டா ஆய்டுதான்னு கேட்டுட்டு,"அடுத்த டேட்டு டைம் ஆகுறதுக்கு பதினாலு நாளுக்கு முன்னாடிலருந்து தொடச்சியா நாலஞ்சு நாளைக்கு செக்ஸ் வச்சிக்கோங்க. ஏன்னா அதுதான் கருமுட்டை உருவாகுற சமயம். அந்த நேரத்துல செக்ஸ் வச்சுக்கிட்டா பெரும்பாலும் உறுதி ஆய்டும். அப்பறமா அடுத்த டேட் ஆகுதா இல்ல தள்ளிப் போகுதான்னு பாத்துட்டு ஒரு புஃல் செக் அப் பண்ணி பாத்துரலாம்" அப்டின்னு அந்த டாக்டர் அம்மா சொல்லுச்சு.
அந்தம்மா சொன்ன எல்லாத்தையும் என் மனசுக்குள்ளயே வெச்சிக்கிட்டேன்.
முந்தா நாளு எனக்கு பதினாலாவது நாளு. பக்கத்துல போயி படுத்தா, எனக்குத் தூக்கம் வருதுன்னு கல்லு மாதிரி படுத்துருச்சு அந்த ஜென்மம்.
எனக்கு அழுகத் தாங்க முடில. எப்பத் தூங்குனனே தெரியாம அப்டியே அழுதுகிட்டே தூங்கிட்டேன்.
நேத்து நையிட்டு நல்ல விதமா தான் இருந்தான்.இன்னைக்காவுது செஞ்சிரலாம்னு மனசுல நெனச்சுட்டு இருந்தேன். அந்தாளுக்கும் 'அந்த' நெனப்பு வரணுமேன்னு நானும் கொஞ்சம் சீவி சிங்காரிச்சி மல்லிப் பூவ தலைக்கு வச்சிக்கிட்டேன்.
நானும் வருவான் வருவான்னு பாத்துட்டு இருக்கேன். ஆனா அவன் என்னடான்னா அந்த நாசமாபோன கிரிக்கெட்ட பாத்துக்கிட்டு கெடக்கான். பொறுத்துப் பொறுத்துப் பாத்தேன். மணி பன்னெண்டு பக்கம் ஆயிடுச்சு. நாள் முழுக்க இருந்த வேல அலுப்புல தூக்கம் வேற கண்ணச் சொழட்ட ஆரம்பிச்சிருச்சி.
இதுக்கு மேல ஆகாதுன்னு, "ஏங்க. வந்துக் கொஞ்சம் செய்ங்கன்னு நானே வெக்கத்த விட்டு கூப்டேன்"
என்னைய தள்ளி விட்டுட்டு அந்தாளு கேக்றான்
"அப்டியென்னடி ஒனக்கு அடக்க முடியாத புண்ட அரிப்பு".
"யாரோ மூச்சு முட்டமுட்ட என்ன அப்டியே தண்ணீல போட்டு அமுக்குற மாதிரி இருந்துச்சு. நெஞ்சே அடச்சிக்கிச்சு. கண்ல தண்ணி தண்ணியா வருது"
"நீயே சொல்லுக்கா. அந்த முடிச்சவிக்கி சொல்றமாதிரி நான் என்ன ஒடம்பு அரிப்பெடுத்தா அலையிறேன்.?"
'வயித்துல ஒரு கொழந்த தங்கணும்னு தான'. ஆம்பள இல்லாமலே ஒரு பொம்பளயால கொழந்த பெத்துக்க முடியும்னு - கடவுள்னு ஒருத்தன் இருந்து - அவன் படைச்சிருந்தானா நான் என்ன மயித்துக்கு இவன் கால புடிச்சிக் கெஞ்சிக்கிட்டு - எட்டி ஒதச்சாலும் அவன் காலயே நக்கிட்டுக் கெடக்கப் போறன்.
அழகம்மாவின் மார்பில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதாள் வாசுகி.
சுய ஆறுதலுக்காக எப்போதும் தன் அதிருப்திகளைப் புலம்பிக் கொண்டே இருக்கும் அழகம்மாவினால், மனக் கண்ணாடிச் சில்லுச் சில்லாய் சிதறி - அதில் வெட்டுப்பட்ட புழுவைப் போல் கண்முன் குறுகி நெளிந்துக் கொண்டிருக்கும் வாசுகிக்கு என்ன ஆறுதல் சொல்வது - ஒருவேளை இருந்தாலும் அதை எப்படிச் சொல்வது என்று விளங்கவில்லை.
"கட்டுனவன் சரியில்லன்னா நம்மள மாதிரி பொம்பளைங்க ஒண்ணு அழுதுச் சாகனும் இல்லனா பொலம்பி சாகனும். நல்லது கெட்டது கேட்கத் தான் நமக்கு நாதி இல்லையே. அழு நல்லா அழு. கண்ணீரூ தீந்தாலும் நம்ம கவலைங்க தீராது"
அழுது அழுது தேய்ந்துப் போயிருந்த கன்னங்களின் இரண்டு புறமும் நிரந்தரமாகப் பதிந்திருந்த கண்ணீர்த் தடத்தின் பாதையில் அழகம்மாவின் கண்ணீர்த் துளிகள் கழுத்து வரை இறங்கி அதன்பின் காற்றில் உலர்ந்து மறைந்துப் போயின.
இவர்களைப் பார்த்து அலட்டிக் கொள்ளாமல் வெயிலில் சுருண்டுப் படுத்திருக்கும் பூனைக்குட்டியைப் போல பாதி உறக்கத்தில் முழித்திருந்தது அந்த நெடிய தெரு.
கார்த்திக் பிரகாசம்...
"எங்கப் போய் தொலஞ்சாரு இந்த மனுஷன்" ஆளக் காணோம்.

அந்தாளு அதுக்கு பதிலே சொல்லல.
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு, அவன் கண்லபடுற மாதிரி நின்னு சேலைய அவுத்துட்டு, அவன் முன்னாடி போய், பாவாடைய கீழலருந்து மேல தூக்கிப் புடிச்சுக்கிட்டு அவன் கைய எடுத்து 'அங்க' வச்சு, "ஏங்க. செய்லாமா" ன்னு அவனோட 'அங்க' கை வைக்கப் போனேன்.

Comments
Post a Comment