வண்ண வண்ணமாய்ச் சிரித்து
வானில் சிறகடித்த பட்டாம்பூச்சி
பறக்க மறுத்து
வண்ணம் மறந்து
மடிந்துக் கிடக்கின்றது
மூடிய கண்களில் வெளிச்சமில்லை
வானத்தை அளந்துப் பார்த்த சிறகுகளில்
அசைவில்லை
பார்த்து பரவசமடைந்த முகங்களிலோ
துளிக்கும் வருத்தமோ கண்ணீரோ இல்லாதது
அந்தப் பட்டாம்பூச்சிக்குத் தெரிந்திருக்கும்
எனக்கும் கூட வருத்தம் இல்லை
பட்டாம்பூச்சியின் மரணத்திற்குப் பரிதபிக்கும் அளவிற்கு மனித மனமானது அவ்வளவு
விஸ்தாரமாய் படைக்கப்பட்டதில்லை
பட்டாம்பூச்சியும் அதை நன்கு அறிந்திருக்கக் கூடும்
அதனால்தான் வாழும் வரை அனைவரையும் வசீகரித்த அதன் வண்ணங்களை மட்டும்
இறந்தும் அது இழக்கவில்லை
கண்ணீர்த் துளிகள் கிடைக்காத
பட்டாம்பூச்சியின் மரணம் உணர்த்துவதெல்லாம்
இறப்பின் வருத்தத்தில் இல்லை
இருக்கும் வரையிலான இருத்தலின் மகிழ்ச்சியில் இருக்கிறது நமக்கான எல்லாமும்
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment