அழகான கையெழுத்து அவளுக்கு
இடைமறிக்கா எளியச் சொற்களின்
தொய்வில்லா நடையில்
பார்க்கும் போதே காட்சிகளின்
பாவனையோடு கண்களில்
மிதக்கும் எழுத்துகள்
படிவ வடிவக் கடிதத்தின்
வலது இறுதியோரத்தில்
ஈரம் உலர்ந்த தடத்தில்
பெயர் எழுதி மூன்று புள்ளிகள்
அழகான கையெழுத்தில்
துயரம் இன்னும் துயரமாக
முற்றில்லா மூன்று புள்ளிகளுடன்
அவளின் தற்கொலை கடிதம்
காற்றிடம் காரணம் பேசுகிறது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment