நுண்உயிரியொன்று நூதனமாக துரத்துகிறது உயிர் பயத்தில் உலகமே பூட்டிக் கிடக்கிறது வேலை இல்லை கடைகள் இல்லை கையில் காசு இல்லை தூங்கியெழுந்து மூன்றுக்கு ஐந்து வேளைச் சாப்பிட்டு டிவி பார்த்தும் நேரம் போகவில்லையென்று யாரோ புலம்புகிறார்களாம் நடந்து நடந்து கால்கள் வலுவிழுந்துவிட்டன அழுது அழுது கண்கள் வீங்கிவிட்டன எல்லா வியாதிகளையும் எதிர்க்கும் சக்தி இயல்பாகவே மனித உடலுக்கு உண்டாம் இருப்பினும் இந்த வயிற்றையும் பசியையும் தவிர்க்கும் சக்தி இல்லையே நாளையோ நாளை மறுநாளோ தான் சாவு என்றாலும் அதுவரையில் உயிரோடிருக்க இன்று ஒரு வேளையாவது சாப்பிட வேண்டுமே கார்த்திக் பிரகாசம்...