பக்கத்துல வந்துட்டதா
தெரிஞ்ச மானம்
இன்னும் மைல் கணக்கா
வெலகி இருக்கு
தெரிஞ்ச மானம்
இன்னும் மைல் கணக்கா
வெலகி இருக்கு
தண்ணில மெதக்குற
பஞ்சு மாதிரி
மேகமெலாம் அந்தரத்துல
மெதக்குது
இந்த பிளேன்னு
பறக்குதா
நீச்சலடிக்குதா
பஞ்சு மாதிரி
மேகமெலாம் அந்தரத்துல
மெதக்குது
இந்த பிளேன்னு
பறக்குதா
நீச்சலடிக்குதா
கடலும் ஆகாசமும்
ஒண்ணு தான
பறக்க முடிஞ்ச கடல்
ஆகாசம்
நீந்த முடிஞ்ச ஆகாசம்
கடல்
ஒண்ணு தான
பறக்க முடிஞ்ச கடல்
ஆகாசம்
நீந்த முடிஞ்ச ஆகாசம்
கடல்
அந்த
ஒசரமான
ஒசரத்தின்
உச்சியில ஆகாசத்தல
ஒரு முத்தம்
ஒசரமான
ஒசரத்தின்
உச்சியில ஆகாசத்தல
ஒரு முத்தம்
கடலுக்குள்ள மூழ்குறதாட்டம்
கண்ணு ரெண்டும்
உள்ள சொருவுது
மெதந்துகிட்டே பறக்குற
திரி இருக்கு
கண்ணு ரெண்டும்
உள்ள சொருவுது
மெதந்துகிட்டே பறக்குற
திரி இருக்கு
ஒதடுங்க ஒத்தியெடுத்த
எடமெல்லாம் ஈரமா
இனிக்குது
ஒடம்பெல்லாம்
சில்லு சில்லா
சிலிர்க்குது
கண்ணாடில
எட்டிப்பாத்தா ஒலகமே
ஒரு சின்னப் புள்ளியாட்டம்
கண்ணுக்குள்ள சிக்குது
எடமெல்லாம் ஈரமா
இனிக்குது
ஒடம்பெல்லாம்
சில்லு சில்லா
சிலிர்க்குது
கண்ணாடில
எட்டிப்பாத்தா ஒலகமே
ஒரு சின்னப் புள்ளியாட்டம்
கண்ணுக்குள்ள சிக்குது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment