எங்கிருந்தோ வந்த
பெயர் தெரியா பறவை
ஒரே ஸ்தாயில் வெகுநேரம் இனிமையான
ஓசையை உண்டாக்கியது
எங்கும் சுகந்தமான
வாசனையை பரப்பிய
தொடர் ஓசை
இன்னிசையாக மாறிய கணம்
நெடுநேரம் நீடிக்குமென்றிருந்த வாசனை
சட்டென மறைந்தது
காற்று தீண்டாத முதிர் இலைகளைக்
கண்ட இளம்கிளையோ
பெயர் தெரியா அடுத்த
பறவையின் வருகைக்காக
அங்கேயே கவர்ச்சியற்று
நிற்கிறது
கார்த்திக் பிரகாசம்...
பெயர் தெரியா பறவை
ஒரே ஸ்தாயில் வெகுநேரம் இனிமையான
ஓசையை உண்டாக்கியது
எங்கும் சுகந்தமான
வாசனையை பரப்பிய
தொடர் ஓசை
இன்னிசையாக மாறிய கணம்
நெடுநேரம் நீடிக்குமென்றிருந்த வாசனை
சட்டென மறைந்தது
காற்று தீண்டாத முதிர் இலைகளைக்
கண்ட இளம்கிளையோ
பெயர் தெரியா அடுத்த
பறவையின் வருகைக்காக
அங்கேயே கவர்ச்சியற்று
நிற்கிறது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment