நான்கு நாட்களாய்
காணவில்லை
எங்கும் தேடியும்
எவ்வித தகவலும் இல்லை
ஊரடங்கின் மந்தமான
ஓர் மாலைப் பொழுதில்
காட்டுச் செடிகளின் புதர்களுக்கிடையில்
சடலமொன்று கிடப்பதாக
சனங்கள் சொல்ல
மார்பிலடித்து
கதறியோடினேன்
கசக்கியெறிந்த பச்சை இலையாய்
பத்து வயது பெண்பிள்ளை
மென்னிதழ்களை
முரட்டு முட்கள்
கூட்டாக குத்தியிருந்தன
பின்னிலிருந்து என்னைத் தள்ளி
முகத்தைத் தூக்கி
மடியில் தளர்த்தி
ஒப்பாரி வைத்தாள் ஒருத்தி
கால்கள் நடுங்க
விரல்கள் விறைக்க
குனிந்தேன்
இந்தப் பிஞ்சின் முகத்திலும்
அதே சாயல் தான்
கார்த்திக் பிரகாசம்...
காணவில்லை
எங்கும் தேடியும்
எவ்வித தகவலும் இல்லை
ஊரடங்கின் மந்தமான
ஓர் மாலைப் பொழுதில்
காட்டுச் செடிகளின் புதர்களுக்கிடையில்
சடலமொன்று கிடப்பதாக
சனங்கள் சொல்ல
மார்பிலடித்து
கதறியோடினேன்
கசக்கியெறிந்த பச்சை இலையாய்
பத்து வயது பெண்பிள்ளை
மென்னிதழ்களை
முரட்டு முட்கள்
கூட்டாக குத்தியிருந்தன
பின்னிலிருந்து என்னைத் தள்ளி
முகத்தைத் தூக்கி
மடியில் தளர்த்தி
ஒப்பாரி வைத்தாள் ஒருத்தி
கால்கள் நடுங்க
விரல்கள் விறைக்க
குனிந்தேன்
இந்தப் பிஞ்சின் முகத்திலும்
அதே சாயல் தான்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment