கல்யாண பந்தலில்
எச்சில் இலைக்காகக்
காத்திருக்கும் பிச்சைக்காரனைப் போல
உறக்கத்திற்கு ஏங்கித்
தழுவும் இமைகளைப் பூட்டினால்
வேலை முடிந்து வெறுங்கையுடன்
வீட்டிற்கு வரும் அப்பாவைப் போல
உறக்கமற்று வந்த
இரக்கமற்ற இருளாய் கவிழ்கிறது
இரவு
உறக்கம் இல்லா சாக்கிலோ
சீராய் அடுக்கி வைத்த
நினைவடுக்கைக்
கலைத்துப் போட்டு பிறாண்ட தொடங்குகிறது
கூரிய நகங்கள் கொண்ட
பூனை மனது
இருள் ஓர் ஆசுவாசம்
இரவு ஓர் நிம்மதி
உறக்கம் ஓர் பெரும் ஆறுதல்
முற்றுப் பெறாத இக்கவிதையைப் போலவே
உறக்கத்தைக் களவாடிய
இந்த இரவும்
நீ...............ள்கிறது
Comments
Post a Comment