காதுகள் அசையாமல்
வாலது ஆடாமல்
கண்ணது இமைக்காமல்
அலங்கரிக்கப்பட்ட அட்டை யானையொன்று
கோவில் வாசலில்
வருபவர்களை வெறிக்கிறது
உள்ளிருக்கும் சிலையைப் போலவே
ஜீவனற்று
இருப்பினும்
யானை அட்டையானதில் ஓர் ஆறுதல்
யாரிடமும்
பிச்சையெடுக்க வேண்டிய
அவசியமில்லை
எவரும்
அதை வைத்து
பிச்சையெடுக்கவும் வாய்ப்பில்லை
Comments
Post a Comment