கடல் தந்த அன்பை
மழையாய் பொழிகிறது
வானம்
மழையாய் பொழிகிறது
வானம்
விதை தந்த அன்பைப்
பூவாய் பூக்கிறது
செடி
பூவாய் பூக்கிறது
செடி
மண் தந்த அன்பைக்
கனியாய் துளிர்க்கிறது
மரம்
கனியாய் துளிர்க்கிறது
மரம்
ஈன்ற அன்பை
இறையாய் வேண்டுகிறது
மனம்
இறையாய் வேண்டுகிறது
மனம்
எதுவொன்றையும்
அன்பால் ஈடுகட்ட முடியும்
ஆனால்
அன்பை ?
அன்பால் ஈடுகட்ட முடியும்
ஆனால்
அன்பை ?
அன்பை
பேரன்பால்
ஈடுகட்டுவதே
அறம்
பேரன்பால்
ஈடுகட்டுவதே
அறம்
Comments
Post a Comment