Skip to main content

Posts

வாடகை சைக்கிள்..

  சிறு வயது நினைவுகளை அவ்வப்போது மனதில் அசைப்போடுவது எப்போதுமே ஒரு இனம் புரியாத சந்தோஷம் தான் . பசுமரத்தாணிப் போல நெஞ்சில் பதிந்த பதிக்கப்பட்ட தருணங்கள் . அதில் ஒரு தருணத்தை நினைவுக் கூரும் வாய்ப்பு " தி ஹிந்து " நாளிதழில் திரைப்பட இயக்குனர் திரு . பாண்டிராஜ் அவர்கள் எழுதிய " பிளாஷ் பாக் " கட்டூரையைப் படிக்கும் போது ஏற்பட்டது .    ஆறாவது ஏழாவது படிக்கும் காலக்கட்டங்களில் விடுமுறையின் போது பாட்டி வீட்டிற்குச் செல்வதற்காக காத்திருக்கும் நாட்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட நாட்கள் . தாத்தா பாட்டியை பார்க்க   வேண்டும் என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும் அங்கு செல்ல வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது என்னவோ அங்கு கிடைக்கும் "" வாடகை சைக்கிள் "" க்காக தான் .    முழு ஆண்டுத் தேர்வு முடிந்த இரண்டு மூன்று நாட்களில் அம்மாவிடம் அடம் பிடித்து பாட்டி வீட்டிற்குச் சென்று விடுவேன் . விடுமுறை என்றாலே பாட்டி வீடு தான் . எங்கள் வீட்டில் இருந்து ...

கண்கள்..

    1 கோடியே 20 லட்சம். இது அரசோ அல்லது ஏதோ ஒரு தனியார் நிறுவனமோ செய்த ஊழல் அல்ல. உயர் அதிகாரி வாங்கிய லஞ்சமும் அல்ல. இது நம் இந்திய திரு நாட்டில் உள்ள பார்வை அற்றவர்களின் எண்ணிக்கை. ஆம். 1 கோடியே 20 லட்சம்.      இவர்களின் வாழ்க்கை  தினமும்  தொடங்குவதும் முடிவதும் இருளில் தான். இவர்களுடைய அன்றாட தேடல்களும் கேள்விகளும் கேள்விக்கான பதில்களும் இருளில் தான் புதைந்து உள்ளன. வாழ்வில் வெளிச்சத்தையே உணராதவர்கள்.இருந்தும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள்.       கண் எதிரே ஒருவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதை கண்டுக் கொள்ளாமல் இருப்பது கூட பார்வை இல்லாததுக்கு சமம். நல்ல விதமாக அந்த ஆண்டவன் நமக்கு கண் பார்வை அளித்துள்ளான். நாம் உயிரோடு இருக்கும் வரை அதை பயன்படுத்திக் கொண்டு நம் வாழ்வு முடிந்த பிறகு மற்றவர்களுக்கு உதவுமாறு வழிவகை செய்தால் அவர்களுடைய வாழ்வும் ஒளி பெறும்.        நம் உயிர் உட்பட இந்த உலகில் எந்த ஒரு பொருளும் விஷயமும் நமக்கு சொந்தமானவை அல்ல. ஒரு கட்டத்தில் இந்த உயிரே...

முதல் சே(வே)லை..

     நண்பன் ஒருவன் பிரபல கம்பெனியின்  நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தான். அதன் ஒரு பகுதியாக "மறக்க முடியாத தருணம்"  என்ற தலைப்பில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு தருணத்தை ஒரு பக்க அளவில் தயார் செய்து வைத்திருந்தான் நேர்முகத் தேர்வுக்காக.. அதை அவன் எனக்கும் நண்பர்களுக்கும்  விவரித்தான். ஆனால் என் மனம் அதில் லயிக்கவில்லை. நான் என்னுள் புதைத்து  வைத்திருந்த மறக்க முடியாத தருணங்களை ஒவ்வொன்றாக அசைப் போட ஆரம்பித்தது என் மனம்.      அதில் மிகவும் முக்கியமான ஒன்று. இது நம்  பல பேருடைய வாழ்கையில் அனேகமாக ஏற்பட்டிருக்கும். பட்டப் படிப்பு முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். அதுவும் வெளி ஊருக்கு. முதன் முறையாக வீட்டை விட்டு வெளியே 350 கிமீ கடந்து சென்னைக்கு .அப்படி இப்படி என்று அலைந்து  ஒரு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 6250. பிடிக்காத வேலை என்ற போதும் மிகவும் அலைந்து கிடைத்த வேலை என்பதால் விடவும் மனமில்லை. பிடிக்காத வேலை என்பதாலோ என்னவோ முதல் மாதம் முடிய ஏதோ ஒரு வருடம் ஆனது போல் இருந்தது.     சம்பளம் ...

நான் கண்ட மனிதர்..

   வாழ்வில் மிக அவசியமான குணாதியசங்களைக் கற்றுக் கொள்ள அரிய புத்தகங்களையும் பெரிய ஞானிகளையும் அறிஞர்களையும் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் முன்பின் தெரியாத ஒரு சாதாரண மனிதர்கள்  ஆழமான நிஜங்களை வெகு எளிதாக புகுத்தி விட்டுச் செல்வார்கள்.. அப்படி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்..    பட்டமளிப்பு விழாவிற்குக் கல்லூரிக்கு செல்வதற்காக  வேலைப் பார்க்கும் கம்பெனியில் விடுமுறையுடன் சேர்த்து  பல திட்டுகளையும் வாங்கிக் கொண்டு அன்று கிளம்பினேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வேண்டுமென்றே ""கட்"" அடித்து விட்டு ஊர் சுற்றுவதும் அதே கல்லூரிக்கு வருடம் கழித்து பழைய பொக்கிஷமான நினைவுகளைச் சுமந்துக் கொண்டு செல்வதும் அரிய சுகம். ஏனென்றால் அந்த கல்லூரி நாட்களுக்குப் பின்னால் கண்ணாடி முன் மட்டும் சொல்லப்பட்ட காதல், சொல்லி மறுக்கப்பட்ட காதல், இக்கட்டான சூழ்நிலையில் நண்பனின் உதவி, தன்னை பற்றி அப்பாவின் மனநிலை, கேட்கமாட்டார்கள் என்று தெரிந்தும் ஆசிரியர் சொல்லும் அறிவுரைகள் என்று மனதை விட்டு நீங்க மறுக்கும் சுகமான சுவடுகள் இருக்கும்.  ...
மழைத் துளிகளாய் இரு மனமெங்கும் பரவிக் கிடந்த நம் காதல் இன்று கிணற்றுத் தண்ணீரை அடைப்பட்டது ஏனோ..!! கார்த்திக் பிரகாசம்...
நீ கருவில் உருவாகி இவ்வுலகத்தில் காலெடுத்து வைக்க பத்து மாதங்கள் வருடக் கணக்காய்க் காத்திருந்தோம்.. உன்னை பள்ளியில் விட்டுச் சென்ற மறு நொடியில் இருந்தே நீ எப்போது  வீடு திரும்புவாய் என்று நொடிகள் நாட்களாகக் காத்திருந்தோம்.. உயர்ப் படிப்பை வெளியூரில் தான் படிப்பேன் என்றாய் அனுப்ப மனம் இல்லாவிட்டாலும் உன் விருப்பத்திற்காகச் சேர்த்து விட்டு நீ எப்போது வருவாய் என்று காலண்டரின் தேதிகளைப் பியித்துக் கொண்டுக்  காத்திருந்தோம்.. வேலைக்காக வெளிநாடு சென்ற நாள் முதல் நீ போன் செய்து எங்களுடன்  பேசும் மூன்று நிமிடத்திற்காக முப்பது மணி நேரம் காத்திருந்தோம்..  மகனே.. இப்பொழுது  கூட தினம் தினம் விடியும் போதெல்லாம் இன்று நீ கண்டிப்பாக வருவாய் என்று காத்திருக்கிறோம் முதியோர் இல்லத்தில்...!!!  கார்த்திக் பிரகாசம்..
உன்னை நேசித்து மட்டும் இருந்தால் என்றோ மறந்து இருப்பேன் ஆனால் நான் உன்னை சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். மறக்க முயற்சித்தால் என் சுவாசம் நின்று விடும்... கார்த்திக் பிரகாசம்...