சிறுவயதில் நானும் தங்கையும் அப்பாவிடம் "கிறிஸ்துமஸ் ஸ்டார்' வாங்கித் தர சொல்லி அடம்பிடிப்போம். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிவந்து பல்புக்கு மின்னிணைப்பு கொடுத்து வீட்டின்முன் தொங்க விடுவார் அப்பா. டிசம்பர் மாதம் தொடங்கும் போதே வீட்டின்முன் ஸ்டார் வெளிச்சமாய்த் தொங்கும்.வீடே நட்சத்திர வெளிச்சத்தில் அழகாய் இருக்கும். அம்மா கிறிஸ்துமஸ் அன்று சர்ச்க்கு கூட்டிப் போவார். "இது கிறித்துவர்கள் கொண்டாடும் பண்டிகை நமக்கெதற்கு.." என்று அவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை. அக்கம்பக்கத்துத் தெரு நண்பர்களெல்லாம் இணைந்து தெருவின் மையப்பகுதியில் உள்ள வீட்டின் முன் குடில் அமைத்து சீரியல் பல்புகளைக் கொண்டு அலங்கரிப்போம். குடிலின் அடித்தளப் பகுதி முழுதும் வைக்கோல் பரப்பி அதன்மீது மாதா சிலை, இயேசு கிறிஸ்துவின் குழந்தைச் சிலை, வண்ணமயமான மணிகள் மற்றும் நட்சத்திரங்கள் என்று குடிலே கோலாகலமாக இருக்கும். தெருவின் மொத்த சிறுவர் பட்டாளமும் அந்த குடிலின்முன் இருக்கும். நண்பர்களுக்குள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் தரிக்கக் கடும் போட்டி நிலவும். கடைசியில் கிறிஸ்துமஸ் தாத்தா உடை வைத்திருப்பவனுக்கோ அல்ல...