அலமாரியை பார்த்தப்படியே எந்தச் சட்டை அணியலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக அந்தச் சட்டைக் கண்ணில் பட்டது. கடைசியாக அந்தச் சட்டையணிந்து சில நாட்கள் தான் இருக்கும். இருந்தாலும் அந்தச் சட்டையிலேயே கண்கள் நிலைகுத்தி நின்றன. ஏதேதோ நினைவுகள் அலமாரியை விட்டு இறங்கி வந்து காட்சிப் பேழையாக கண்முன்னே விரிந்தன.
அது நீலமும் கருப்பும் ஒன்றுக்கொன்று கலந்து நிறைந்திருக்கும் சட்டை. அவளுக்கு நீலம் பிடிக்கும். எனக்கு கருப்பு பிடிக்கும். இரண்டு நிறங்களும் நிறைந்திருப்பதால் எங்கள் இருவருக்கும் இந்தச் சட்டையைப் பிடிக்கும்.
அந்தச் சட்டை அணிந்திருந்த ஒருசமயம், இந்தச் சட்டையில் ஒரு தனித்தன்மை இருக்கிறது தெரியுமா.? சொல்கிறேன் கேள் என்றேன்.
அவள் ஆவலானாள்.!
கருப்புடன் ஜோடி சேரும் அனைத்து நிறங்களுமே அழகாகும். ஏற்கனவே அழகாக இருப்பதுக்கூட கருப்புடன் சேரும்போது தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் மிச்ச அழகையும் மிச்சம் வைக்காமல் கொட்டிவிடும். அதுதான் கருப்பின் சிறப்பம்சம். ஆனால் கருப்பை அழகாக்கும் நிறங்கள் என்றுப் பார்த்தால் மிகக் குறைவு. என்னைப் பொறுத்தவரையில் சிகப்பும் நீலமும் மட்டும் தான் கருப்பை அழகாக வெளிக்கொண்டு வரும் நிறங்கள். இந்தச் சட்டையைப் போல.
இதில் நீலம் நீ. கருப்பு நான். என்னை அழகாக்குபவள் நீ. உன்னை அடைக்காப்பவன் நான். இது நீலமும் கருப்பும் கலந்த சட்டை மட்டுமல்ல. உன்னில் நானும் என்னில் நீயும் நம்மில் நாமும் கலந்திருப்பதற்கான சாட்சி.
ஆவலில் இருந்த அவளுடைய கண்கள் இப்பொழுது கொஞ்சம் கலங்கியிருந்தன.
கண்களைத் துடை..! யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்றேன். ஆமாம். யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்று என் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். கலங்கியிருந்தது என்னவோ அவளுடைய கண்கள். கண்ணீரைக் கொட்டியதோ என் கண்கள்.
அன்றிலிருந்து இந்தச் சட்டை அணியும் போதெல்லாம் முத்தம் உறுதி.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment