Skip to main content

Posts

அம்மாவிற்கு உடம்பு சரியில்லை

மகன் வந்தான் மகள் வந்தாள் மருமகன் வந்தார் மகனின் நண்பர்கள் வந்தார்கள் மகளின் குழந்தைகள் வந்தார்கள் அவர்களுக்கு மூன்று வேளையும்  நேரத்திற்கு உணவுப் பரிமாறப்பட்டது அனைவரும் சுவையாகச் சாப்பிட்டார்கள் வெளியே உலவச் சென்றார்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் மதியவேளைகளில் ஓய்வெடுத்தார்கள் அழுக்கு படிந்த அவர்களின் துணிமணிகள்  சுத்தமாக வெளுக்கப்பட்டன குழந்தைகள் அலங்கோலப்படுத்திய பொருட்கள்  அதேயிடத்தில் அழகாகச் சீர்படுத்தப்பட்டன அவர்கள் உறங்க வேண்டி தலையணை மற்றும் விரிப்புகள் நேர்த்தியாக விரிக்கப்பட்டன அனைவரும் உறங்கிய பின் அவள் உண்ணச் சென்றாள் அறை முழுவதும் அவளுடைய இருமல் சத்தம் எதிரொலித்துக் கொண்டிருந்தது இருமலை விழுங்க முயன்றாள்  முடியவில்லை மூச்சு வாங்கத் தொடங்கியது சுடுதண்ணீரில் மிளகைக் கலந்து  குடித்துவிட்டு படுத்தாள் அனைவரும் சுவையாக உண்ட மயக்கத்தில் விளையாடிய களைப்பில் நிம்மதியாக உறங்கிக் கிடந்தார்கள் ஒருவரும் அவளிடம் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை ஒரு வாரமாக அம்மாவிற்கு உடம்பு சரியில்லை கார்த்திக் பிரகாசம்...

உரையாடல் #4

"ஏன் எதைப் பற்றிப் பேசினாலும் கடைசியில் காமத்தோடு தொடர்புபடுத்தியே முடிக்கிறாய்.?" "நான் இன்னும் முடிக்கவே இல்லையே..! ஒருவேளை நான் காமத்தில்தான் முடிக்க வேண்டுமென்று நீ எப்போதும் விரும்புகிறாயோ...!" கார்த்திக் பிரகாசம்...

ஜாதியை அழித்தொழிக்கும் வழி...!!!

ஒரு இந்து சமூக சீர்திருத்த மாநாட்டில் நிகழ்த்துவதற்காக டாக்டர். அம்பேத்கரால் எழுதப்பட்டு பேசப்படாத உரையின் எழுத்து வடிவமே "ஜாதியை அழித்தொழிக்கும் வழி".  குறிப்பிட்ட அந்த சீர்திருத்த இயக்கமே தாமாகவே இவ்வுரையை அச்சடித்து வெளியிட  முன்வந்து பின்பு பல்வேறு காரணங்கைளைச் சொல்லி பின்வாங்க அம்பேத்கரே புத்தகத்தை எட்டணாவிற்கு விற்றார். அம்பேத்கர் வெளியிட்ட அடுத்த ஆண்டே இப்புத்தகம் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டவர் நம் "பெரியார்". இந்து மதத்தைப் பற்றியும்,அதன் சாதிய அமைப்புகள் பற்றியும் இதற்குமேல் ஒரு மனிதனால் ஆராய்ந்தறிந்து சொல்ல முடியாது. அம்பேத்கர் ஓர் மாமேதை. ஜாதியின் அடிவேரிலிருந்து அதன் கிளை இலைகள் வரை ஒன்றுவிடாமல் அலசியிருக்கிறார். தம் இனத்தவரிடமிருந்து மற்றவர்களைப் பிரித்தறிய "முகமதியர்கள்" பயன்படுத்திய சொல்லே "இந்து" என்பதாகும். முகமதிய படையெடுப்புக்கு முந்தயை சமஸ்கிருத புத்தங்கங்களில் "இந்து" சொல்லே காணப்படவில்லை. கிட்டத்தட்ட நான்காயிரம் ஜாதிகளின் கூட்டிணைப்பே "இந்து"...

தூத்துக்குடி

பொது பிரச்சினைக்காக அனைவரின் நலனுக்காக ஒன்றுகூடி போராடிய மக்களை அதிகார துஷ்பிரயோகத்தினால் அடக்கியொடுக்கி மனிதாபிமானமில்லாமல் பத்து பேரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது அரசும் அதனதிகாரமும்...! நாங்கள் வைத்தது தான் சட்டம் நாங்கள் கொண்டுவரும் திட்டங்களை நல்லதோ கெட்டதோ நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் அதன் பாதகங்களைக் குறித்து யாரும் வாய் திறக்கக் கூடாது மீறி அரசுக்கெதிராக அதிகாரத்திற்கெதிராக கேள்வியெழுப்பினால் போராட்டம் நடத்தினால் அடக்கப்படுவீர்கள் அப்படியும் அடங்கவில்லையென்றால் சுட்டுக் கொல்லப்படுவீர்களென்று பகீரங்கமாக எச்சரிக்கிறார்கள்...! போராடியவனைக் கொன்றுவிட்டு அவன் குடும்பத்திற்கு பணஉதவியென்று அறிக்கையும் விடுகிறார்கள்...! ஆட்சி அதிகாரத்தை ருசிக்க வரிசையில் காத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் அழுகைக் குரலை தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முந்தியடிக்கிறார்கள்...! டிவி சேனல்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படாமல் பாதிக்கப்பட்டவர்களின் இறந்தவர்களின் இரத்தம் தோய்ந்த முகங்களைத் திரும்பத் திரும்பக் காட்டுகின்றனர்...! கையாலாகாத ஆத்திரத்தையும் குற்ற உணர்ச்சியையும் இஸ்திரி போட்...

அவர்கள் குடிக்கிறார்கள்

அவர்கள் குடிக்கிறார்கள் சந்தோஷத்திற்காக அல்ல கவலைகளை மறப்பதற்காக அல்ல விதியை நொந்து கொள்வதற்காக அல்ல சூழலைக் கடிவதற்காக அல்ல கோப வெறியைத் தக்க வைப்பதற்காக அல்ல பகையைத் தீர்ப்பதற்காக அல்ல அவர்கள் குடிக்கிறார்கள் தங்கள் முகமூடியை கழட்டி எறிவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் சுய கௌரவத்தை மறந்து விடுவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் உண்மையைப் பகிர்வதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் ஒருசில கண்ணீர்த் துளிகளைச் சிந்துவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் தலைவிதித் தத்துவத்தை மாற்றுவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் இறந்த காலத்தின் படிப்பினையை நினைவுக் கூறுவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் நிகழ்காலத்தின் சோதனையை முறியடிப்பதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் நெடுங்கால நோக்கத்தை அசைபோடுவதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் அடுத்து எப்போது குடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக அவர்கள் குடிக்கிறார்கள் கார்த்திக் பிரகாசம்...

எப்பொழுதும் எதற்காகவும்

எப்பொழுதும் எதற்காகவாவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவர்களைக் கண்டால் ஆத்திரமாக இருக்கிறது உயிரில்லாமல் கிடக்கும் அவர்களின் கண்களைக் காண சகிக்கவில்லை சிரிக்க மறுக்கும் அவர்களின் உதடுகளைச் சுட்டெரிக்க வேண்டும் போலிருக்கிறது சொந்தக் கவலைகளில் சுகம் தேடும் அவர்களின் உள்ளங்களைச் சூழ்ந்திருக்கும் ஒட்டுண்ணிகளை விரட்டியோட வைக்க வேண்டும் கவலைப்பட தயாராகக் காத்து கிடக்கும் அவர்களின் மனங்களைக் ஆழ்கடலில் தூக்கியெறிய வேண்டும் நிகழைச் சூன்யமாக்கிக் கொள்ளும் அவர்களின் மௌனத்தை வேரோடு பிடிங்கியெறிய வேண்டும் போலிருக்கிறது... கார்த்திக் பிரகாசம்...

உரையாடல் #3

நீயேன் இந்த அளவுக்கு செல்பிஃஷா யோசிக்க ஆரமிச்சட்டனு எனக்குத் தெரியல கீதா. " இட்ஸ் நாட் அபௌட் செல்பிஃஷ்னஸ் முத்து. இட்ஸ் அபௌட் அவர் செல்ப் ஹாப்பினஸ் "...! நானும் எத்தன நாளைக்குத் தான் பொறுத்து போறது. "அப்பிடி என்ன உன் சந்தோஷம் கெட்டுப் போற அளவுக்கு பண்ணிட்டாங்க.?" ஏன் கேக்கமாட்டீங்க.? 'கொழந்த பொறந்து முழுசா ஆறு மாசம் கூட முடியல. "புள்ள பெத்துட்டாங்கறதுக்காக எத்தன நாள் வீட்லயே சும்மா படுத்தே கெடப்பாளாமா..? ஏதோ ஊரு உலகத்துலயே இவ ஒருத்திதான் புள்ள பெத்துக்கிட்ட மாதிரி" ன்னு உங்கம்மா காதுப்படவே பேசுறாங்களேன்னு ஒடம்புக்கு முடிலனாலும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். தினமும் ரெண்டு ஷேர் ஆட்டோ, லோக்கல் ட்ரைன்'னு முப்பது முப்பது அறுபது கிலோமீட்டர் போயிட்டு வரேன். வீட்டுக்கு வந்ததும் நிம்மதியா ரெண்டு நிமிஷம் ஒக்காரலாம்னு நெனைச்சா கொழந்தையோட அழுக்குத் துணியெல்லாம் மல மாதிரி குவிச்சு வச்சிருக்காங்க. சரி 'சமையலாவது ஏதாவது பண்ணிருக்காங்களானு சமையல்கட்டு பக்கம் போன மதியம் அவங்க சாப்புட்ட தட்ட கூட கழுவாம போட்டு வச்சிருங்காங்க'. இதெல்லாம் மட்டும் இல்லாம சா...