Skip to main content

உரையாடல் #3

நீயேன் இந்த அளவுக்கு செல்பிஃஷா யோசிக்க ஆரமிச்சட்டனு எனக்குத் தெரியல கீதா.

"இட்ஸ் நாட் அபௌட் செல்பிஃஷ்னஸ் முத்து. இட்ஸ் அபௌட் அவர் செல்ப் ஹாப்பினஸ்"...! நானும் எத்தன நாளைக்குத் தான் பொறுத்து போறது.

"அப்பிடி என்ன உன் சந்தோஷம் கெட்டுப் போற அளவுக்கு பண்ணிட்டாங்க.?"

ஏன் கேக்கமாட்டீங்க.? 'கொழந்த பொறந்து முழுசா ஆறு மாசம் கூட முடியல. "புள்ள பெத்துட்டாங்கறதுக்காக எத்தன நாள் வீட்லயே சும்மா படுத்தே கெடப்பாளாமா..? ஏதோ ஊரு உலகத்துலயே இவ ஒருத்திதான் புள்ள பெத்துக்கிட்ட மாதிரி" ன்னு உங்கம்மா காதுப்படவே பேசுறாங்களேன்னு ஒடம்புக்கு முடிலனாலும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். தினமும் ரெண்டு ஷேர் ஆட்டோ, லோக்கல் ட்ரைன்'னு முப்பது முப்பது அறுபது கிலோமீட்டர் போயிட்டு வரேன். வீட்டுக்கு வந்ததும் நிம்மதியா ரெண்டு நிமிஷம் ஒக்காரலாம்னு நெனைச்சா கொழந்தையோட அழுக்குத் துணியெல்லாம் மல மாதிரி குவிச்சு வச்சிருக்காங்க. சரி 'சமையலாவது ஏதாவது பண்ணிருக்காங்களானு சமையல்கட்டு பக்கம் போன மதியம் அவங்க சாப்புட்ட தட்ட கூட கழுவாம போட்டு வச்சிருங்காங்க'. இதெல்லாம் மட்டும் இல்லாம சாயந்திரம் நான் கரெக்ட்டா வீட்டுக்கு வர நேரத்துக்கு பாப்பாவ தூங்க வச்சறாங்க. நான் இந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு வரப்போ பாப்பா எந்துருச்சு அழ ஆரம்பிச்சிடறா. அவள மறுபடியும் தூங்க வைக்கிறதுக்குள்ள மணி மூணாயிடுது. திரும்பவும் காலைல ஆறு மணிக்கு எந்துருச்சி காலைலக்கும் மதியானதுக்கும் சமைச்சுட்டு கெளம்பி ரெடியாயி ஷேர் ஆட்டோலையும் ட்ரைன்லயும் மாத்தி மாத்தி அலைஞ்சு ஆபீஸ் போறதுக்குள்ள மணி பத்து ஆயிடுது.

நான் மட்டும் என்ன மாடா இல்ல மிஷினா..? நானும் மனுசி தானங்க..!

"கீதா..! அவங்க பெரியவங்க. அவங்கள இனிமே மாத்த முடியாது. நாமதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சிக்கணும். அதவிட்டுட்டு நீயும் ஏன் வீணா வருத்தப்படுற.?"

வீட்டு வேலையும் செஞ்சிக்கிட்டு ஆஃபீஸ்க்கும் அலையறது கூட எனக்கு கஷ்டமா இல்லிங்க. ஆனா இதுவரைக்கும் என்ன பாராட்டி ஒரு வார்த்தக் கூட சொன்னதில்ல.. 'இவளோ செஞ்சியும் அவங்க என்ன ஒரு மனுசியா கூட மதிக்க மாட்டிக்குறாங்க. . அதான் மனுசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.

"எண்ட் அஃப் தி டே, இட்ஸ் ஆல் அபௌட் ஸ்மால் அப்பிரிசியேஷன்". ஒவ்வொரு மனசும் ஒரு சின்ன பாராட்டுக்குத் தானங்க ஏங்கிட்டு இருக்கு.

புரியுது கீதா..! நீ அழாத.! நாளைக்கு காலைலயே நான் அம்மாகிட்ட பேசுறேன்.

"வேணாங்க.. நீங்க எதுவும் பேசாதீங்க. அப்புறம் மகனும் இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுறானேன்னு அவங்க மனசு கஷ்டப்படுவாங்க."

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...